Thursday, October 28, 2021
Tuesday, October 26, 2021
Indian Navy Sailor Recruitment | Indian Navy Jobs 2021 - 2022 | Employment News Tamil | SSLC Jobs
இந்திய கடற்படையில் 10ம் வகுப்பு தகுதியில்
300 காலிபணியிடம் | வேலைவாய்ப்பு
இந்திய கடற்படையில் 300 மாலுமி (MR) காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2022 ஏப்ரலுக்கான ஆட்சேர்ப்பு (2022 April Batch)
- வேலையின் பெயர் : மாலுமி (MR) | Sailor (MR)
- காலிபணியிடம் எண்ணிக்கை : 300 பணியிடங்கள்
- கல்வித்தகுதி : 10ம் வகுப்பு
- விண்ணப்பம் தொடக்கம் : 29.10.2021
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.11.2021
- விண்ணப்பிக்கும் முறை : Online
- அதிகாரபூர்வ இணையதளம் : https://www.joinindiannavy.gov.in/
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்10ம் வகுப்பு தேர்ச்சி
அல்லது
அதற்கு இணையான கல்வித்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்கனில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது :
விண்ணப்பிப்பவர்கள் 01.04.2002 முதல் 31.03.2005 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். (இரண்டு தேதிகளும் சேர்த்தே)ஊதிய விபரம் :
பயிற்சி காலங்களில் மாதம் ரூ. 14,600/- உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்தபின் லெவல் 3 ஊதிய அடிப்படையில் (ரூ. 21,700/ - ரூ.69,100/-) வழங்கப்படும். கூடுதலாக மாதம் MSP Rs. 5200/- மற்றும் DA வழங்கப்படும்.தேர்ந்தெடுக்கும் முறை :
1. Short List2. எழுத்து தேர்வு, உடல்தகுதித் தேர்வு (PFT) மற்றும் மெடிக்கல் டெஸ்ட்
தேர்வு கட்டணம் :
ரூ. 60 + ஜிஎஸ்டிஇந்திய கடற்படை மாலுமி (MR) விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணைதளமான www.joinindiannavy.gov.in 29.10.2021 –- 02.11.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன் குறிப்புக்காக 10ம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்
- இந்திய கடற்படை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யாவிட்டால் உங்கள் மின்னஞ்சலை கொண்டு புதிதாக பதிவு செய்து கொள்ளவும்.
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது உங்களின் செயலில் உள்ள இமெயில் முகவரி, தொலைபேசி எண்ணை சரியாக குறிப்பிடவும். ஏனெனில் தேர்வின் அழைப்பு சரியாக பெற முடியும்.
- பதிவு செய்த இமெயில் முகவரியின் மூலம் இணையதளத்தில் சென்று “Current Opportunities” என்பதற்குள் நுழைந்து விண்ணப்பிக்கவும்.
- சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து பின் சமர்ப்பிக்கவும்.
இந்திய கடற்படை அதிகாரபூா்வ தளம் Click Here
இந்திய கடற்படை நோட்டீபிகேஷன் Click Here
விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி 29.10.2021
இந்திய கடற்படை ஆன்லைன் விண்ணப்பம் Click Here
Tuesday, October 19, 2021
Success in the attempt to Destroy Metal Waste using Bacteria
உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா
பாக்டீரியா என்றால் என்ன?
What is Bacteria?
பாக்டீரியாக்கள் பூமியில் எல்லா இடங்களிலும் காணப்படும் சிறிய ஒரு செல் உயிரினமாகும். இவற்றிற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமில்லை. சில பாக்டீரியா இனங்கள் வெப்பநிலை மற்றும் குறைந்த காற்ற அழுத்தம் அதிகமாக உள்ள இடங்களிலும் உயிா் வாழ முடியும். நம்மை போன்ற மனிதர்களின் உடலிலும் பாக்டீரியாக்கள் நிறையவே உள்ளது. சொல்லப்போனால் மனித உடலில் உள்ள உயிரணுக்களை விட பாக்டீரியா செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
உலோக கழிவுகளை அழித்து உண்ணும் பாக்டீரியா
தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள சாண்டியாகோ ஆண்டிஸ் மற்றும் சிலி கடற்கரை மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஒருசிறிய நாடு சிலி.
சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய அளவில் தாமிர உற்பத்தி நடக்கிறது. அதிகமான தாமிர சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து தாமிரங்களை பிரித்தெடுக்கும் போது உருவாகும் கழிவுகள் நிறைந்து சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிப்பதாக இருந்தன. இதனை சரி செய்யும் பொருட்டு சிலி நாட்டில் உள்ள ஒரு 33 வயதான பயோடெக்னாலஜிஸ்ட் நடாக் ரெயில்ஸ் என்பவர் அன்டோஃபாகாஸ்டாவில் உள்ள ஒரு சுரங்கத் பகுதியில் உள்ள தன்னுடைய ஆய்வகத்தில் உலோக கழிவுகளை உண்ணும் பாக்டீரியாக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
உயிரி தொழில் நுட்ப வல்லூனர் நாடாக் ரியல்ஸ் கடினமான சுற்றுப்புற சூழ்நிலைகளில் உயிர் வாழும் பாக்டீரியாக்களுடன் தீவிர சோதனை நிகழ்த்தி வந்தார். சுரங்கங்களில் தாமிரங்களை பிரித்தெடுக்க பாக்டீரியா நுண்ணியிரிகளை பயன்படுத்தும் சோதனைகள் நடந்து கொண்டிருந்த போது அவருக்கு இந்த உலோக கழிவுகளை உண்ணும் பாக்டீரியாக்களை உருவாக்கும் யோசனை வந்தது.
சில உலோகங்களை மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். அதிலும் மறுசுழற்சி செய்யப்படாதவை கழிவுகளாகவே தங்கிவிடும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதை கண்டு அவற்றினை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அழிக்கும் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வில் ஈடுபட்டார்.
அந்தோஃபாகாஸ்டாவிலிருந்து 350 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் உயரத்தில் உள்ள டாட்டியோ கீசர்களில் இருந்து பாக்டீரியாவை உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களை பிரித்தெடுத்தார். அமில சூழ்நிலையிலும் வாழும் தன்மையுள்ளவை பாக்டீரியாக்கள். இந்த பாக்டீரியாக்கள் உலோகங்களை அதிக அளவில் அரிக்கும் தன்மையினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை என கூறியிருக்கிறார். பாக்டீரியாக்களுடன் ஒரு ஆணியை போட்டு ஆராய்ச்சி செய்தார். இதில் முதலில் அந்த பாக்டீரியாக்கள் ஆணியை சிதைப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அவை உணவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதிக பசியுடன் இரண்டு வருடங்கள் சோதனைகளுக்கு பின், பாக்டீரியாக்கள் உலோகங்களை சாப்பிடும் வேகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை கண்டார். அப்போது அவை ஒரு ஆணியை சிதைக்க வெறும் மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டன.
பாக்டீரியாக்கள் ஆணியை சிதைத்தபின் அதில் எஞ்சியிருப்பவை ஒரு சிகப்பு நிறத்திலான திரவம் மட்டுமே. இது ஒரு அதிசயமான தரத்தை கொண்ட லிக்ஸிவியண்ட் எனப்படும் திரவமாகும். பாக்டீரியாக்கள் உலோகங்களை சிதைத்ததற்கு பின் உற்பத்தி செய்யப்படும் திரவமானது ஹைட்ரோமெட்டல்லர்ஜி எனப்படும் செயல்முறைகளில் தாமிரங்களை உற்பத்தியை மேம்படுத்த முடியும் என நடாக் கூறுகிறார்.
திரவ மிச்சமானது பாறைகளிலிருந்து தாமிரத்தை பிரித்தெடுப்பதற்காக பயன்படுத்தலாம். இது இப்போதிருக்கும் ரசாயணங்களை பயன்படுத்துவதை விட அதிக நேர்த்தியான முறையில் உருவாக்குவது சாத்தியமானது.
நடாக் ரியல்ஸ் தனது கண்டுபிடிப்புக்கு சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த சோதனைகள் மனிதர்களுக்கு மற்றும் சுற்றுபுறத்திற்கு எந்தவகையிலும் தீங்காக இருக்காது என்பதை நிருபித்துள்ளதாக நாடாக் கூறியிருக்கிறார். ஆராய்ச்சிகளின் மூலம் தாமிரம் மற்றும் பல்வேறு வகையான கனிமங்களை பிரித்தெடுக்கும் பணிகளில் உருவாகும் உலோக கழிவுகளை சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித தீங்கும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் நீக்க முடியும்.
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பாக்டீாியா கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பாக்டீரியா பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கழிவுகளிலேயே அதிபயங்கரமாக சுற்றுப்புறச்சூழல்களை பாதித்து கொண்டிருப்பவை பிளாஸ்டிக் கழிவுகள் தான். இந்த பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியாவை ஜெர்மனியில் உள்ள லெப்ய்ஸிக் பகுதியைச் சேர்ந்த ஹெல்ம் ஹோட்ஸ் சுற்றுப்புறச்சூழல் ஆய்வு மையத்தினை சேர்ந்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சூடோமோனாஸ் புடிடா என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை பாக்டீரியாக்கள் கனம் நிறைந்த பாலியூரித்தேன் வகை பிளாஸ்டிக்கை கூட நொதித்து எளிய மக்கும் பொருளாக மாற்றிவிடும். இந்த வகை பாக்டிரியாக்கள் சுற்று புற சூழலுக்கு ஏற்றதா என்ற ஆய்வை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.
இதில் வெற்றி கண்டால் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஓரளவு உலகம் காப்பாற்றப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Monday, October 18, 2021
Indian Navy Recruitment Join Indian Navy இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு
இளைஞா்களுக்கான அாிய வாய்ப்பு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு
Indian Navy Recruitment - 2022
இந்திய கடற்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
- இந்திய கடற்படை மாலுமி (AA)
- சீனியர் செகண்டரி மாலுமிகள் (SSR)
மொத்த காலிபணியிடங்கள் : 2500
கல்வித்தகுதி : 12ம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை : Online
இணையதளம் : http://www.joinindiannavy.gov.in/
காலிபணியிடங்கள் மற்றும் எண்ணிக்கை
- ஆர்ட்டிஃபிகர் அப்ரண்டிஸ் மாலுமிகள் (AA)
Sailors for Artificer Apprentice (AA)
500 காலிபணியிடங்கள் - சீனியர் செகண்டரி மாலுமிகள்
Sailors for Senior Secondary Recruits (SSR)
2000 காலிபணியிடங்கள்
Sailors for Artificer Apprentice (AA)
500 காலிபணியிடங்கள்
2000 காலிபணியிடங்கள்
கல்வி தகுதி :
ஆர்ட்டிஃபிகர் அப்ரண்டிஸ் மாலுமிகள் (AA)
பத்தாம் வகுப்பு முடித்து பின் 12ம் வகுப்பு தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
இந்திய அரசு பள்ளி கல்வி வாரிய அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்களிலிருந்து கெமிஸ்ட்ரி /பயோலஜி / கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் கணிதம் மற்றும் இயற்பியலில் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சீனியர் செகண்டரி மாலுமிகள் (SSR)
பத்தாம் வகுப்பு முடித்து பின் 12ம் வகுப்பு தேர்வில் இந்திய கல்வி அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியங்களிலிருந்து வேதியியல் / உயிரியல் / கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் கணிதம் மற்றும் இயற்பியலில் தேர்ச்சி பெற்றவர்கள்.
வயது தகுதி
01.02.2002 முதல் 31.01.2005 வரை ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட இரண்டு தேதிகளையும் சேர்த்து.
ஊதியம்
பயிற்சி காலங்களில் மாதம் 14, 600/- உதவித்தொகை தரப்படும். பயிற்சியை முடித்தபின் லெவல் 3ன் படி (‘21,700 – 69.100) ஊதியம் வழங்கப்படும். கூடுதலாக மாதம் தோறும் MSP Rs. 5200/- மற்றும் DA போன்றவை வழங்கப்படும் மேலும் ஊதிய விவரங்களுக்கு அலுவலக நோட்டீபிகேஷனை பார்க்கவும்.
தேர்வு முறை
- Short Listing
- எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்ப கட்டணம் ரூ. 60 + GST.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள், வயது தளர்வு போன்ற விபரங்களை Indian Navy யின் அதிகாரபூர்வ இணைய தள நோட்டீபிகேஷனில் பார்த்து படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
இந்திய கடற்படை அதிகாரபூர்வ
இணையதளத்தின் வேலை வாய்ப்பு பகுதி Click Here
இந்திய கடற்படை நோட்டீபிகேஷன் Click Here
இந்திய கடற்படை ஆன்லைன்
விண்ணப்ப படிவம் Click Here
ஆன்லைன் விண்ணப்பபடிவத்திற்கு முதலில் ஆபிஸியல் வெப்சைட்டில் Register செய்த பின் Candidate Login ல் சென்று Apply பண்ண வேண்டும்.
Sunday, October 10, 2021
AMD Recruitment, IBPS Recruitment
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இந்திய அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகம்
Atomic Minerals Directorate for Exploration & Research (AMD)
இந்திய அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகம் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விளம்பர எண் \: AMD - 3/2021
கல்வி தகுதிகள் : 10th ITI, Diploma, Any Degree
காலி பணியிடங்கள் : 124
அதிகாாபூா்வ இணையதளம் : www.amd.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.10.2021
பணியின் பெயா் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை
1. Scientific Assistant - B (Physics) - 04 Posts
2. Scientific Assistant - B (Chemistry) - 05 Posts
3. Scientific Assistant - B (Geology) - 14 Posts
4. Scientific Assistant - B
(Electronics / Instrumentation) - 02 Posts
5. Scientific Assistant - B - 09 Posts
(Computer Science / Information Technology)
6. Scientific Assistant - B - 01 Post
(Electrical)
7. Scientific Assistant - B (Civil) - 01 Post
8. Technician -B (Physics /
Electronics / Instrumentation ) - 04 Posts
9. Technician -B (Laboratory ) - 14 Posts
10. Technician -B (Plumber ) - 01 Post
11. Technician -B (Binding ) - 01 Post
12. Technician -B (Printing ) - 01 Post
13. Technician -B (D riling ) - 20 Posts
14. Upper Division Clerk (UDC) - 16 Posts
15. Driver (Ordinary Grade) - 13 Post
16. Security Guard - 18 Posts
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதிய விகிதங்களை நோட்டிபிகேஷனில் பாா்த்துக் கொள்ளவும்,
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
ஆன்லைன் அப்பிளிகேஷன் பேஜ் லிங் Click Here
.....................................................................
வங்கி பணியாளா் தோ்வு நிறுவனம்
Institute of Banking Personal Selction
வங்கி பணியாளா் தோ்வு வாாியம் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதிகள் : Any Degree
காலி பணியிடங்கள் : 7885 கிளாா்க் பணியிடங்கள்
அதிகாாபூா்வ இணையதளம் : http://www.ibps.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதிய விகிதங்களை நோட்டிபிகேஷனில் பாா்த்துக் கொள்ளவும்,
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
ஆன்லைன் அப்பிளிகேஷன் பேஜ் லிங் Click Here
Tuesday, October 5, 2021
Central Govt Jobs 10th, 12th, Degree
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு (FSSAI)
- மொத்த காலிபணியிடங்களின் எண்ணிக்கை : 255
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021
- விண்ணப்பிக்கும் முறை : Online
விளம்பர எண் : DR - 04 / 2021
1. Food Analyst - 04 காலிபணியிடங்கள்
2. Technical Officer - 125 காலிபணியிடங்கள்
3. Central Food Safty Officer - 37 காலிபணியிடங்கள்
4. Assistant Manager (IT) - 04 காலிபணியிடங்கள்
5. Assistant Manager (Journalism or
Mass Communication or Public Relation) - 02 காலிபணியிடங்கள்
6. Assistant Manager (Social Work, Psychology,
Labour and Social Welfar, Library Science ) - 02 காலிபணியிடங்கள்
7. Hindi Translator - 33 காலிபணியிடங்கள்
8. Assistant - 01 காலிபணியிடம்
9. Personal Assistant - 19 காலிபணியிடம்
10. IT Assistant - 03 காலிபணியிடம்
11. Junior Assistant Grade - I - 03 காலிபணியிடம்
விளம்பர எண் : DR - 03 / 2021
12. Assistant Director (Admin & Finance) - 05 காலிபணியிடம்
13. Assistant Director (Legal) - 01 காலிபணியிடம்
14. Assistant Director (Technical) - 09 காலிபணியிடம்
15. Deputy Manager (Journalism or
Mass Communication or Public Relation) - 09 காலிபணியிடம்
16. Deputy Manager (Marketing) - 01 காலிபணியிடம்
விளம்பர எண் : DR - 02 / 2021
17. Principal Manager - 01 காலிபணியிடம்
என மொத்தம் 255 காலி பணியிடங்கள் உள்ளன,
கல்வித் தகுதி, வயது வரம்பு , விண்ணப்பிக்கும் முறை, ஊதிய விகிதம், தோ்வு செய்யும் முறை, Syllabus போன்றவைகளை FSSAI அலுவலக அதிகாரபூா்வ இணையதளமான http://www.fssai.gov.in/ இல் பாா்க்கவும்.
அல்லது லிங்கில் கிளிக் செய்து பாா்க்கலாம்.
FSSAI அலுவலக அதிகாரபூா்வ வேலைவாய்ப்பு பக்கம் Click here
விளம்பர எண் : DR - 04 / 2021 க்கான Official நோட்டிபிகேசன் Click here
விளம்பர எண் : DR - 03 / 2021 க்கான Official நோட்டிபிகேசன் Click here
Online Application Link ஆனது 08.10.2021 முதல் வெளியிடப்படுகிறது
சென்னை E|MP HQ காலிப்பணியிடங்கள்
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தகுதிகளில் 4 புதிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
மொத்த காலிபணியிடங்களின் எண்ணிக்கை - 5
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-10-2021
ஆப்லைன் (Offline) முறைபடி கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கவனமாக பூா்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களில் சுய கையொப்பம் இட்டு இணைக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மேல் உறையில் Application of the Post of ......... விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்,
விண்ணப்பங்கள்
The Commandant, Embarkation Head Quarters, Fort St, George, Chennai - 600009
என்ற முகவாிக்கு கடைசி தேதியான 22-10-2021 க்குள் வந்து சேரும்படி தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். கூாியா் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ அனுப்பக் கூடாது,
பதவிகள்
1. லோயா் டிவிசன் கிளாா்க் (LDC)
2. டேலி கிளாா்க் (Tally Clerk)
3. மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மெசஞ்சா் (MTS)
4. மல்டி டாஸ்கிங் ஸ்டாப் ச'ஃபைவாலா (MTS)
லோயா் டிவிசன் கிளாா்க் (LDC)
மொத்தம் 2 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி 12ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதனுடன் கணிணியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வாா்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வாா்த்தைகள் என்ற வேகத்தில் கம்ப்யூட்டா் டைப்பிங் செய்யத் தொிந்திருக்க வேண்டும்.
ஊதிய விகிதம் ரூ, 19900/- (Level 2)
டேலி கிளாா்க் (Tally Clerk)
மொத்தம் 1 காலிபணியிடம் உள்ளது.
கல்வித் தகுதி 12ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதனுடன் அங்கிகாிக்கப்பட்ட ஷிப்பிங் ஏஜென்ஸிகளில் 3 வருடம் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஊதிய விகிதம் ரூ, 19900/- (Level 2)
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் மெசஞ்சா் (MTS)
மொத்தம் 1 காலிபணியிடம் உள்ளது.
கல்வித் தகுதி 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அங்கிகாிக்கப்பட்ட அலுவலகங்களில் (சிவில் / அரசு) ஆறு மாதங்கள் அலுவலக உதவியாளராக பணியாற்றிய அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள பணியை இல்லாமல் எந்த பணியையும் செய்ய விருப்பம் இருக்க வேண்டும்
ஊதிய விகிதம் ரூ, 18000/- (Level 1)
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் ச'ஃபைவாலா (MTS)
மொத்தம் 1 காலிபணியிடம் உள்ளது.
கல்வித் தகுதி 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அங்கிகாிக்கப்பட்ட அலுவலகங்களில் சில மாதங்கள் ஹவுஸ் கீப்பிங் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள பணியை இல்லாமல் எந்த பணியையும் செய்ய விருப்பம் இருக்க வேண்டும்
ஊதிய விகிதம் ரூ, 18000/- (Level 1)
வயது வரம்பில் தளா்வு
எஸ்சி / எஸ்டி பிாிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளா்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிாிவினருக்கு 3 ஆண்டுகள் தளா்வு கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளா்வு கொடுக்கப்பட்டுள்ளது மேலும் விபரங்களை EMB HQ நோட்டிபிகேஷனில் பாா்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பதாரா்கள் எழுத்துத்தோ்வு ( Written Exam ) மற்றும் செய்முறைத் தோ்வின் ( Practical Exam ) மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
நோட்டிபிகேஷன் மற்றும் விண்ணப்பப்படிவம் எடுக்க Click here
நோட்டிபிகேஷனை முழுமையாக படித்துக் கொள்ளவும்.
அப்ளிகேஷன் தனியாக தெளிவாக டைப் செய்து கொள்ளவும் அல்லது இந்த லிங்கில் எடுத்துக் கொள்ளவும் click here
Sunday, October 3, 2021
The first hyperloop trip to be released by Dubai Expo 2020
ஹைப்பர்லூப் (Hyperloop) அதிவேக பயணம் ஆரம்பம்
இந்த அவசரமான உலகில் அனைவரின் பயணமும், நமது பொருட்களை கொண்டு சேர்க்கும் சரக்கு போக்குவரத்தும் மிகவிரைவாக அமையவே விரும்புகிறோம்.
அந்த தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் புதிய தலைமுறைகளுக்காக கண்டறியப்பட்டதே ஹைப்பர்லூப் போக்குவரத்து ஆகும்.
முதலில் ஹைப்பா்லுப் பற்றி தொிந்து கொள்வோம்,
ஹைப்பர்லூப் என்றால் என்ன?
What is Hyperloop?
ஹைப்பர்லூப் என்பது அதிவேக போக்குவரத்து வாகனம் ஆகும். அதன் அமைப்பு ஒரு மூடப்பட்ட குறைந்த காற்றழுத்ததுடன் கூடிய ராட்சத குழாய் ஆகும். இந்த குழாய் போன்ற அமைப்புக்குள் இருக்கையுடன் கூடிய ஒரு வாகனத்தில் கேப்சூல் என்பாா்கள் (pod) காற்றினை எதிர்த்து தரை உராய்வு இல்லாமல் சுலபமாகவும் அதிவேகமாகவும் பயணமாகும்.
(உதாரணமாக ஒரு ஸ்ட்ராவினுள் அதன் அளவை விட சிறிய உருளை வடிவ பொருளை போட்டு வேகமாக ஊதினால் அந்த பொருள் பின்பக்கம் நாம் ஊதும் காற்றின் அழுத்தத்தால் வேகமாக வெளியேறும் அதே போல் தான்)
இப்போது பல நாடுகளில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் அதிகவேகம் கொண்டதாக இருந்தாலும், அவை இந்த ஹப்பர்லூப்பின் வேகத்திற்கு ஈடாக இருக்காது.
இது பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்தை விமானங்களின் வேகத்துக்கு இணையாக கொண்டு செல்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது பயணநேரம் வெகுவாக குறைகிறது.
இந்த ஹப்பர்லூப் வாகனத்தின் வேகம் மணிக்கு 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக்கூடியது.
இந்த ஹப்பர்லூப் என்பதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளது. அவை
- ஒரு மிகப்பொிய ராட்சத குழாய்
- இருக்கையுடன் கூடிய அழுத்தப்பட்ட வாகனம் (Pod)
- டெர்மினல் (Terminal)
ஒரு மிகப்பொிய ராட்சத குழாய்
குழாய் என்பது பெரிய மூடப்பட்ட குறைந்த காற்றழுத்தத்தை கொண்ட அமைப்பாகும், இது சுரங்கப்பாதை, நிலத்திற்கு மேலேயும், பாலங்கள் மூலமும் ஒாிடத்திலிருந்து மற்றொரு இடம் வரை கொண்டு செல்லப்படும்.
இருக்கையுடன் கூடிய அழுத்தப்பட்ட வாகனம் (Pod)
கன்ட்ரோல் ரூம் மூலம் இயக்கப்படும் தானியங்கி வாகனமாகும்,
இதனை Pod மற்றும் கேப்சூல் என்று அழைக்கின்றனா். இந்த ஒரு Pod ல் 25 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும், ரயில் பெட்டிகள் போல குழாயினுள் வாிசையான Pod வைக்கப்படும், இந்த ஹைப்பர்லூப் மின்காந்த அல்லது ஏரோடைனமிக் சக்தியுடன் இயங்கும்.
இதில் உள்ள வழிகாட்டி கருவி ஸ்டேஷனில் நிற்பதற்கும் புறப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவான விசயங்கள்
இந்த ஹப்பர்லூப் அமைக்க பல பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. ஹைப்பர்லூப்யினை உருவாக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் பலநிறுவனங்கள் போட்டிபோட்டு முயற்சி செய்தன.
அதன் அடிப்படைகளை உருவாக்கியபின் பல குழுக்களை கொண்டு அதன் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.
அதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள தலைமையகத்தில் Pod வாகன வடிவமைப்பு போட்டிக்காக
1 கிலோ மீட்டர் நீள டிராக்கை உருவாக்கியது. ஜூலை 2019ல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மணிக்கு
463 கி.மீ வேகத்தில் ஹைப்பர்லூப்பினை இயக்கி உலகசாதனை புரிந்தது. அதன் பின் நவம்பர் 2020 லாஸ்லேகாஸில் உள்ள சோதனைதளத்தில் விரிஜின் நிறுவனம் முதன்முறையாக ஹைப்பர்லூப் வாகனத்தில் ஆட்களை செல்ல வைத்து சோதனை நடத்தியது.
ஹைப்பா்லூப் பயணம் எவ்வாறு இருக்கும்?
ஹைப்பா்லூப் பயணத்தை பற்றி அதனை தயாாித்த நிறுவனம் தனது இணைய தளபக்கத்தில் தொிவித்தாவது,
இதில் பயணிப்பது விமானத்தில் பயணிப்பது போன்ற உணா்வை ஏற்படுத்தும், ஹைப்பா்லூப் புறப்படும் போது விமானம் உயர கிளம்பும் போது ஏற்படும் உணா்வு ஏற்படும் அது அதனுடைய வேகத்தை எட்டியவுடன் சாதாரணமாக ஒரு டேபிளில் தேநீரை வைத்து அருந்தலாம் அந்த அளவிற்கு இதமான பயண அனுபவத்தை தரும் என கூறியிருக்கின்றனா், இது விமானத்தை விட பயண கட்டணம் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது,
ஹப்பர்லூப் முதன்முதலாக துபாயில் தொடக்கம்
The first hyperloop trip to be released by Dubai
இப்போது ஹப்பர்லூப் வாகனம் உலகிலேயே முதன்முதலாக துபாயில் தான்
வர்த்தக பயன்பாட்டுக்கு வருகிறது. துபாயில் அக்டோபா் 1 2021 அன்று துவங்கிய துபாய் எக்ஸ்போவில் Zeleros premieres ல் தயாாிக்கப்பட்ட ஹப்பா்லூப் வாகனம் தனது முதல் சுற்றுபயணத்தை தொடங்குகிறது, முதல் தொடக்கமாக 10 கி.மீ, மட்டுமே இயக்கப்படுகிறது, இந்த ஹைப்பா்லூப் பாதையானது துபாய் முதல் அபுதாபி வரை இணைக்கப்படுகிறது. இதற்கிடையே உள்ள தூரம் சுமாா் 150 கி,மீ
என கூறப்படுகிறது. அது இந்த தூரத்தை 12 நிமிடத்தில் கடந்து விடும், இந்த ஹைப்பா்லூப் அமைக்க 22 பில்லியன் டிரான்ஸ் வரை ஆகும் என கூறுகின்றனா்,
துபாய் எக்ஸ்போ 2020 (2021-2022)
Dubai Expo 2020
சென்ற வருடங்களில் கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக் கூடிய உலக கண்காட்சி இந்த முறை துபாயில் நடைெபறுகிறது, இதற்கு துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி துபாயில் அக்டோபா் 1 2021 மாலை விமாிச்சையாக துவங்கியது, இக்கண்காட்சி அடுத்த வருடம் 2022 மாா்ச் வரை நடைபெறும். இதில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் ஏராளமான புகழ்பெற்ற இசை கலைஞா்களின் கலைநிகழச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன, இந்த எக்ஸ்போவில் உலக நாடுகள் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு செல்ல தனித்தனி அரங்கங்கள் அமைத்துள்ளன,
இந்தியாவின் அரங்கம்
கண்காட்சியில் எல்லா நாடுகளும் ஆடம்பர வேலைபாடுகளுடன் அரங்கங்கள் அமைத்து இருந்தாலும் இந்தியா நான்கு மாடிகளுடன் கூடிய பிரமாண்ட அரங்கத்தை ரூ. 400 கோடி செலவில் அலுவலகம் போன்ற அமைப்புடன் கூடிய நிரந்தர கட்டிடமாக அமைத்துள்ளது, கண்காட்சிக்கு பிறகும் வா்த்தகம், கலச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் பயன்படுத்தவே இவ்வாறு கட்டியிருப்பதாக கூறுகின்றனா்,
இந்தியாவில் ஹைப்பா்லூப்
Hyperloop in India
இந்தியாவில் மும்பை மற்றும் புனேவை இணைக்கக் கூடிய ஹைப்பா்லூப் பயணத்திற்கான பணிகள் விா்ஜின் ஹைப்பா்லூப் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன, இந்த திட்டம் மகாராஷ்டிராவில் உள்ள தனியாா் உட்கட்டமைப்பு முதலீடாகும், இதன்மூலம் 1.8 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி 36 பில்லியன் அமொிக்க டாலா் பொருளாதார உயா்வை உருவாக்கும் என கூறப்படுகிறது,
வெகுவிரைவில் நாமும் அதிவேக பயணத்தை அனுபவிப்போம்,
Friday, October 1, 2021
Karnan is one of the 5 films to watch internationally in The New York Times newspaper
தி நியூயார்க் டைம்ஸ் நியூஸ் பேப்பரில் சர்வதேச அளவில் பார்க்க வேண்டிய 5 படங்களில் கர்ணன்
Karnan is one of the 5 films to watch internationally in The New York Times newspaper
New York Times
தி நியூ யார்க் டைம்ஸ் என்பது அமெரிக்கவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான தினசரி நாளிதழ்
இந்த நாளிதழ் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் சர்வதேச அளவில் பார்க்கவேண்டிய 5 படங்கள் வரிசையில் கர்ணன் தமிழ் படமும் இடம் பெற்றுள்ளது.
5 திரைபடங்கள்
- ‘The Father Who Moves Mountains’
- ‘Koshien: Japan’s Field of Dreams’
- ‘I Never Climbed the Provincia’
- ‘Karnan’
- ‘The Cloud in Her Room’
திரைப்படங்களின் தமிழாக்கம்
‘The Father Who Moves Mountains’
மலைகளை நகர்த்தும் தந்தை '
நெட்ஃபிக்ஸ் இல் உள்ளது
பனிப்புயலால் பாதிக்கப்பட்ட மலையில் ஒரு மகன் காணாமல் போன ஒரு உளவுத்துறை அதிகாரியைத் தொடர்ந்து, மெதுவாக தொடங்கும் இந்த ருமேனியப் படம் பழக்கமான ஹாலிவுட் வார்ப்புருக்களை ஆழமாக்குகிறது-ஒரு தந்தையின் இடைவிடாத முயற்சியானது தனது குழந்தையைக் காப்பாற்ற; இயற்கைக்கு எதிரான மனிதனின் போர் - விரக்திக்கும் குழப்பத்திற்கும் இடையிலான மங்கலான கோடுகள் பற்றிய சிக்கலான நெறிமுறை நாடகமாக. Mircea Jianu (Adrian Titieni) தனது மகன் காணாமல் போனதைப் பற்றி முதலில் அறிந்ததும், அவனது எதிர்வினைகள் தான் எந்த பெற்றோரிடமிருந்தும் அவரது பார்வையில் எதிர்பார்க்கலாம்: பீதி, விரக்தி, கோபம். சீரற்ற வானிலை இருந்தபோதிலும், மீட்புக் குழுவை சரிவுகளில் பின்தொடர அவர் வலியுறுத்துகிறார், மேலும் அவர்களின் மந்தமான தன்மையைக் கண்டிக்கிறார்.
ஆனால் அவருடைய வேதனை சீக்கிரத்தில் கோபமாக மாறுகிறது. மிர்சியா உளவுத்துறைக்கு சட்டவிரோத உயர் தொழில்நுட்ப தேடல் நடவடிக்கையை அமைக்க அழைக்கிறது, இது உள்ளூர் பத்திரிகையாளர்களின் சந்தேகத்தை தூண்டுகிறது மற்றும் மிர்சியாவின் உதவிக்காக இழந்த மற்ற மலையேற்றக்காரர்களின் உறவினர்களிடமிருந்து வேண்டுகோளை அழைக்கிறது. இதற்கிடையில், வானிலை மோசமாக மாறுகிறது, மிர்சியா கொடுமைப்படுத்துபவர்கள் மற்றும் லஞ்சம் பெறுவது ஒரு பயனற்ற தேடலாக அதிகளவில் உணர்கிறது. சுவரில் எழுதுவதை அவர் ஏற்க மறுப்பது பெற்றோரின் பக்தியின் போற்றத்தக்க கோடுகளா அல்லது அதிகாரவர்க்கம் எப்போதுமே வழிநடத்தும் ஒரு சகாப்தத்தின் நினைவுச்சின்னமா? டேனியல் சந்துவின் படம் இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்கிடையே மென்மையாக சமநிலையுடன் உள்ளது, செங்குத்தான, அப்பட்டமான அமைப்பு நடைமுறையில் சிக்கல்களுக்கு ஒரு அடிப்படை பின்னணியை வழங்குகிறது.
‘Koshien: Japan’s Field of Dreams’
'கோஷியன்: ஜப்பானின் கனவுகளின் களம்'
அமேசான் பிரைம் வீடியோ உள்ளது
சிறந்த விளையாட்டு ஆவணப்படங்களைப் போலவே, ஜப்பானிய உயர்நிலைப் பள்ளி பேஸ்பாலின் எமா ரியான் யமாசாகியின் வெளிப்படுத்தும் உருவப்படம் அதைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தைப் போலவே விளையாட்டைப் பற்றியது. "கோஷியன்: ஜப்பானின் கனவுகளின் புலம்" மேஜர் லீக் நட்சத்திரங்களான ஹிடேகி மாட்சுய் மற்றும் ஷோஹே ஒஹ்தானி போன்ற தொழில்முறை மேடையில் முதலில் தள்ளப்பட்ட கட்ரோட் அரங்கிற்கு எங்களை அழைக்கிறது: ஜப்பானின் வருடாந்திர தேசிய உயர்நிலைப் பள்ளி பேஸ்பால் போட்டி, அரங்கத்திற்குப் பிறகு "கோஷியன்" என்றும் அழைக்கப்படுகிறது. இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
2018 ஆம் ஆண்டில் கோஷியனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நூறாவது ஆண்டு விழாவிற்கு முன்னதாக யமசாகி இரண்டு பயிற்சியாளர்களைப் பின்தொடர்கிறார்: டெட்சுயா மிசுதானி, தனது கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார், மற்றும் அவரது முன்னாள் உறுப்பினர் ஹிரோஷி சசாகி கோஷியனுக்கு ஒன்பது முறை சென்றிருந்தாலும் வெற்றி பெறவில்லை. அவர்களின் மாறுபட்ட அணுகுமுறைகள்-மிசுதானி கண்டிப்பானது மற்றும் பழமையானது; சசாகி தொழில்நுட்ப அறிவு மற்றும் மாற்றியமைத்தல்-ஜப்பானிய பேஸ்பால் வரையறுக்கும் போட்டி தூண்டுதல்களைக் கண்டறியவும். 1800 களில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், இந்த விளையாட்டு ஜப்பானிய தற்காப்புக் கலைகளின் சடங்கு மற்றும் மரியாதையை ஊக்குவித்தது, அதே நேரத்தில் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் வணிகமயமாக்கப்பட்ட தொலைக்காட்சி காட்சியாக மலர்ந்தது.
யமசாகியின் ஆர்வம், போட்டியின் நெருப்பில் உருவான ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்புகளில் உள்ளது. கோஷியன் அணியில் இருந்து நிராகரிக்கப்பட்ட கண்ணீர்க் கண்களைக் கொண்ட வீரர்கள் மிசுதானியின் அணியின் கேப்டன் ஒன்று திரண்டபோது, "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இங்கே அனைவரின் இதயங்களையும் சுமந்து விளையாடுவார்கள்" என்று உறுதியளித்தபோது, என் விளையாட்டு-வெறுப்பற்ற இதயம் கூட அதிசயங்களுக்கு அடிபணிந்தது. விளையாட்டு.
‘I Never Climbed the Provincia’
'நான் ஒருபோதும் ப்ரோவிஞ்சியாவை ஏறவில்லை'
அதை OVID.tv இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் அல்லது அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது .
சிலியின் சாண்டியாகோவில் பல தசாப்தங்கள் பழமையான பேக்கரி மூடப்பட்டு, புதிய அபார்ட்மென்ட் தொகுதிக்கு மாற்றப்படும் போது, திரைப்படத் தயாரிப்பாளர் இக்னாசியோ அக்ஸெரோ தனது ஜன்னலிலிருந்து மவுண்ட் ப்ரொவின்சியாவின் தடையற்ற பார்வையை காணவில்லை. அவரது காட்சி நிலப்பரப்பில் ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம், "நான் ஒருபோதும் பிராவிஞ்சியாவில் ஏறவில்லை" என்ற கிறிஸ் மார்க்கர் மற்றும் சாந்தல் அகெர்மனின் திரைப்பட நினைவுக் கதைகளின் பாணியில் ஒரு நெருக்கமான ஆவணப்படம், ஜென்டிஃபிகேஷன், சமூகம் மற்றும் நினைவகம் பற்றிய விரிவான உருமாற்றத்திற்கு ஊக்கியாகிறது. அக்ஜெரோ தனது சுமாரான விசாரணைக்கு திறந்த மனதுடன் மற்றும் அன்பான அணுகுமுறையை எடுத்துக்கொள்கிறார்: நகரத்தின் சிறிய பாக்கெட்டை உருவாக்கும் அனைத்து நினைவுகளையும் பற்றி அவர் அண்டை வீட்டாரையும் கடைக்காரர்களையும் நேர்காணல் செய்கிறார், அக்கம் பக்கத்தில் வளர்ந்த தனது சொந்த அனுபவங்களை நினைவுபடுத்துகிறார், மேலும் மர்மமான, மனச்சோர்வு கடிதங்களை எழுதுகிறார் பெயரிடப்படாத பெறுநர் மீண்டும் எழுதவில்லை. சுற்றுப்புற ஒலியின் அடர்த்தியான படுக்கை அஜீரோவின் பயணப் படங்களை அடிப்படையாகக் கொண்டது, இழந்த இடங்களையும் நேரங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் சினிமாவின் சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது - சார்லி சாப்ளினின் "குடியேறியவர்" இன் குறுக்கிட்ட கிளிப்புகள் மூலம் இயக்குனர் மேலும் வலியுறுத்துகிறார். தொற்றுநோய்க்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தாலும், "நான் ஒருபோதும் ப்ரோவிஞ்சியாவை ஏறவில்லை" என்பது ஒரு தருணத்தின் ஒரு படமாக உணர்கிறது, இது தேக்கம் மற்றும் மாற்றம் ஆகிய இரண்டிற்கும் ஏங்குகிறது.
‘Karnan’
'கர்ணன்'
அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யுங்கள் .
தமிழ் திரைப்படத் இயக்குநா் மாரி செல்வராஜின் படைப்பு, இதில் துடிப்பான கிராமவாசிகள், வில்லத்தனமான காவல்துறையினர் இந்த படம் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமப்புற தாழ்த்தப்பட்ட குடியிருப்பான பொடியாங்குளத்தில் வெளிவருகிறது, இது மாநிலத்தின் அவமதிப்பு மற்றும் அலட்சியத்தால் பாதிக்கப்படுகிறது. கிராமம் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு கூட தகுதியுள்ளதாகக் கருதப்படவில்லை, இது அதன் வறுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல போராடுகிறார்கள், இளைஞர்கள் வேலைக்குச் செல்ல முடியாது, மருத்துவமனைகளுக்குச் செல்லாதது துயரங்களுக்கு வழிவகுக்கிறது.
இந்த சூழ்நிலையிலிருந்து, பக்திமிக்க கர்ணன் தோன்றினார், அவர் ஒரு வருடாந்திர போட்டியில் வெற்றி பெறுகிறார். (காட்சி விவரிக்கப்பட்டதை விட நன்றாகவே பார்க்கப்படுகிறது.) ஆனாலும் அவர் படத்தின் முதல் பாதியில் ஒரு தொந்தரவாக அனைவராலும் கருதப்படுகிறார், அவரது விரைவான கோபம் அவரை பஸ் டிரைவர்கள், போட்டி கிராமவாசிகள் மற்றும் போலீஸ்காரர்களுடன் அடிக்கடி சண்டையிட வைத்தது.
ஆனால் கர்ணனின் பொறுப்பற்ற தன்மையின் கீழ் குமுறுவது ஒரு நியாயமான ஆத்திரம். காவல்துறையினருடனான சந்திப்பு கிராமத்தின் பெரியவர்களின் கொடூரமான சித்திரவதைக்கு வழிவகுக்கும் போது, கர்ணனின் கோபம் சமூகம் முழுவதும் வெடிக்கும். 1990 களில் நடந்த கொடூரமான நிஜ வாழ்க்கை சம்பவங்களை கொண்டு, செல்வராஜ் நீண்டகாலமாக காவல்துறையின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகழ்பெற்ற பழிவாங்கும் கதையை வழங்குகிறார், அதே நேரத்தில் தமிழ் ஸ்டார் தனுஷ் அச்சமற்ற கர்ணனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
‘The Cloud in Her Room’
'தி மேகம் இன் ஹர் ரூம்'
பிரஞ்சு புதிய அலைகளின் அழகிய கருப்பு மற்றும் வெள்ளை தட்டு மற்றும் முறையான பரிசோதனைகளை இன்றைய சீனாவின் ஹாங்சோவுக்கு மாற்றியமைத்து, "தி கிளவுட் இன் ஹர் ரூம்" முஸியின் வாழ்க்கையில் ஒரு சில நாட்களில் அழகான சாய்ந்த பார்வையை வழங்குகிறது, 22 சீனப் புத்தாண்டுக்காக பெய்ஜிங்கில் இருந்து வீடு திரும்பிய பழைய கல்லூரி பட்டதாரி. காட்சிப்படுத்தல் அல்லது ஒரு பாரம்பரிய சதித்திட்டத்தைத் தவிர்த்து, இயக்குனர் ஜெங் லு சினியுவான் தனது விவாகரத்து பெற்ற பெற்றோருடனும், அவளது இரண்டு அழகான வழக்குரைஞர்களுடனும் மற்றும் அடிக்கடி அவளது குழந்தை பருவ வீட்டின் வெறிச்சோடி கிடக்கும் அறைகளிலும் செலவழிக்கும் அமைதியான காட்சிகள் மூலம் முஸியின் வாழ்க்கையில் மெதுவாக நம் மனதை தொடுகிறாா்.
படம் குறுகிய, மெதுவான வேகத்தில் நகர்ந்தாலும், ஒளிப்பதிவாளர் மத்தியாஸ் டெல்வாக்ஸ் தனது கேமரா மூலம் நம் கவனத்தை வைத்திருக்கிறார், அசாதாரண கோணங்கள் மற்றும் இசையமைப்புகளை அமைப்பதை தொடர்ந்து ஆராய்கிறார்: ஒரு நீச்சல் வீரர் சிற்றலை நீரின் மூலம் நெருக்கமாக பிடிக்கப்பட்டார்; முஸியும் அவளுடைய தாயும் ஸ்ட்ரோப் விளக்குகளின் கீழ் கரோக்கே பாடும்போது ஒரு சிறிய, நீளமான எண்ணங்களின் வழியாகப் பார்க்கிறார்கள்; நிலவின் ஒரு ஷாட் திடீரென நிறங்களை தலைகீழாக மாற்றுகிறது, அதனால் ஒரு கருப்பு உருண்டை ஒரு நியான்-வெள்ளை வானத்தில் மின்னும். கேமராவின் தேடலான பார்வை இறுதியில் "தி க்ளவுட் இன் ஹர் ரூம்" இளைஞர்களின் வேரற்ற தன்மையை வெளிப்படுத்தும் உருவமாக முஜியின் சொந்த தேடலை பிரதிபலிக்கிறது - இது உலகளாவியது போல் இடமற்றது.
Popular
-
What is Adobe indesign used for - What is adobe Indesign? What is Adobe indesign used for - What is adobe Indesign? Adobe Indesign is a ...
-
WEBP to JPG Converter WEBP to JPG Converter Free Converting WEBP images to JPG Introduction: Introduce the ...
-
Indesign Shortcuts – part 2 | Indesign shortcut tools | indesign important default tools shortcut Indesign View Menu shortcut...