Sunday, November 27, 2022

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” - பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

சொந்த வீடு வாங்குவதை காட்டிலும் வாடகைக்கு வீடு தேடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில் வாடகை வீட்டில் குடியேற வேண்டுமென்றால் எக்கச்சக்கமான கெடுபிடிகளையெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடிய நிலையே இருக்கும்.

கரன்ட் பில், மெயின்ட்டனென்ஸ், ஆணி அடிக்கக் கூடாது, தண்ணீர் பயன்பாடு, உணவு பழக்கம் என நீளும் பட்டியலை தாண்டி ஏறி இறங்கும் ஒவ்வொரு வீட்டிலும் தான் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்தான் என போர்டு போடாத குறையாக கூறி வருவது கூடவே தொடரும் சங்கடமே இன்றைக்கு பலரும் சந்திக்கும் சூழலாக இருக்கிறது.

இதையெல்லாம் ஒருவழியாக கடந்து வந்தாலும் இந்த கல்லூரியில், இந்த கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு மட்டும்தான் வீடு வாடகைக்கு கொடுப்போம் என்று கண்டிஷன் போடுவது எந்தளவுக்கு நியாயமாக இருக்கும் என தெரியவில்லை என அண்மையில் ட்விட்டரில் பகிரப்பட்டு பதிவின் மூலம் நெட்டிசன்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.

ALSO READ: வாடகைக்கு வீடு எடுக்க எந்த எல்லைக்கும் செல்வதா? - வைரலாகும் மும்பைக்காரரின் Dating Bio!

அதன்படி, இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில்தான் இப்படியான சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக வாடகைக்கு குடியேறுவோரிடம் வீட்டு உரிமையாளர்கள் என்ன சமூகம், திருமணமானவரா, உணவு பழக்கம் குறித்துதான் கேள்வி கேட்பார்கள். ஆனால் பெங்களூருவில் தற்போது வாடகைதாரர் என்ன பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார், அவரது லிங்க்ட் இன் கணக்கு விவரம் இதையெல்லாம் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.

அதன்படி, பிரியான்ஷ் என்ற ஒருவர் பெங்களூருவின் இந்திரா நகர், டோம்லூர், HAL ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி வந்திருக்கிறார். இதற்காக முகவரையும் அணுகியிருக்கிறார். ஆனால் அந்த முகவரோ ஐ.ஐ.டி அல்லது ஐ.ஐ.எம்மில் படிக்காததால் பிரியான்ஷை நிராகரித்திருக்கிறார் என்பதுதான் வியப்படை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்கிறது.

image

இதுகுறித்த சாட்டிங்கில், அந்த முகவர் பிரியான்ஷின் பின்புலம் என்ன, எங்கு படித்தார் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரியான்ஷ், தான் வேலூர் வி.ஐ.டி பல்கலையில் படித்ததாகவும், பெங்களூருவில் உள்ள Atlassian நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த முகவர், “IIT/IIMல் படித்திருக்காததால் சாரி, உங்கள் புரொஃபைல் பொருந்தவில்லை” எனக் குறிப்பிட்டு நிராகரித்திருக்கிறார்.

இந்த சாட் ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரியான்ஷ், “ஃப்ளாட் ஓனர்களே, ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? எனக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் போனஸாக ஹவுஸ் பார்ட்டி எப்படி செய்வது, கேம்ஃப்யரில் கிட்டார் வாசிப்பதெல்லாம் சொல்லித் தருவேன்” என பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நடந்த சில சம்பவங்களின் ஸ்கீரின்ஷாட்களையும் பகிர்ந்திருக்கிறார்கள். அதில், வயசு, முழு சம்பள விவரம் கேட்டதோடு நிற்காமல், காதலி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: பெங்களூருல லைஃப் பார்ட்னர்கூட கிடைச்சிடும்; ஆனால் ஃப்ளாட்(மேட்)? - வைரல் பதிவின் பின்னணி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FjiB6DM
via IFTTT

பெங்களூரு டூ ஹவுரா: உணவகப் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததால் நிறுத்தப்பட்ட ரயில்

பெங்களூரில் இருந்து ஹவுரா வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் வேகமாக இறங்கினர். இதனால் குப்பம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக மேற்கு வங்காளம் ஹவுரா வரை செல்லும் வாராந்திர ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது உணவாகப் பெட்டியில் திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பெட்டிக்கும் புகை பரவியதால் உடனடியாக லோகோ பைலட் ரயிலை குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தியுள்ளார்.

image

இதையடுத்து குப்பம் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே ஊழியர்கள் பங்காருபேட்டை பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு பணி வீரர்களை வரவழைத்து ரயில் முழுவதும் சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் உள்ள பிரேக்கிங் சிஸ்டத்தில் அதிக அளவு வெப்பம் காரணமாக புகை வந்துள்ளது தெரியவந்தது.

image

இதைத் தொடர்ந்து எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து 3 மணி நேரம் கழித்து குப்பம் ரயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளையும் ஏற்றிக் கொண்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் குப்பம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XQVr6FZ
via IFTTT

”நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஜன., 31க்குள் இந்த அறிவிப்பு வெளியாகும்” - கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என குஜராத்தில் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜனவரி 31, 2023-க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாக தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்துள்ளார்.

image

மேலும் அவர் பேசுகையில்... இந்த வாக்குறுதி பொய்யானவை அல்ல, பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆயிரக்கணக்கான குஜராத் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர் என அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.

image

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனத , ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் குஜராத்தில் முகமிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு டிசம்பர் எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/CfdgJFI
via IFTTT

லக்னோ: பழச்சந்தையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து -20 கடைகள் தீயில் எரிந்து நாசம்

லக்னோவில் உள்ள பழச் சந்தை ஒன்றில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்துகுள்ளானதில் 20 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சீதாபூர் சாலையில் பழச் சந்தையில் அமைந்துள்ள  கடை ஒன்றில் நேற்று (சனிக்கிழமை ) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சிறிது நேரத்தில் தீ அருகே இருக்கும் கடைகளுக்கும் பரவியது. தீ மற்றும் புகை மூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  கடைகளில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும் , இதில்  20 கடைகள் தீயில்  சாம்பலான என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் ,  தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டி  தீயணைப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், கடைக்காரர்கள் பட்டியலை கொடுத்த பிறகே தீயினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட முடியும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/jMt5csv
via IFTTT

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை எத்தனை லட்சம் தெரியுமா? வெளியான தகவல்

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ம் தேதி முதல்  தற்போது வரை பக்தர்களின் கூட்டம் அங்கு தொடர்ந்து அலை மோதி வருகிறது. குறிப்பாக சனிக்கிழமையான நேற்று (26.11.22) மட்டும் தரிசனத்திற்காக வெர்ச்சுவல்யூ மூலம் 86,814 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் நேற்று 78,148 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (27.11.22) 63,130 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இன்று காலை 11 மணி வரை 31,895 பேர் தரிசனம் செய்துள்ளனர். இது வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களின் வருகையை மட்டுமே குறிப்பிடுகிறது. இவர்கள் மட்டுமன்றி, ஸ்பாட் புக்கிக் செய்து வருவோர் மற்றும் நீலிமலை, அப்பாச்சிமேடு, சரங்கொத்தி, மரக்கூட்டம், சத்திரம், புல்லுமேடு ஆகிய வனப்பாதைகளில் வருவோரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இன்று இரவிற்குள் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16ம் தேதி முதல் தற்போது வரையில் அங்கு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ஐந்து லட்சம் கடந்த நிலையில் இதர வழிகளையும் சேர்த்தால் அதுவும்  இரண்டு லட்சம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

மொத்தத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 9 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களின் 80 சதவீதத்தினர் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள்  கேரள அரசு துறைகள் மற்றும் தேவசம்போடு சார்பில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தின் இரண்டு ஆண்டுகள், கட்டுப்பாடுகளுடனான தரிசனம் ஓராண்டு என மூன்று ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் முழுத் தளர்வுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவே  தினசரி பக்தர்களின் வருகையை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/QkBTwKL
via IFTTT

அக்னிபாத் திட்டத்துக்கு இன்று முதல் ஆள்சேர்ப்பு தொடக்கம்!

இந்திய ராணுவத்தின் "அக்னிபாத்" திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இன்று தொடங்குகிறது.

முன்னதாக அக்னிவீர் வாயு திட்டம் மூலம்  இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை) என்றும், இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

image

இதற்கு 2002 ஜூன் 27க்கும் 2005 டிசம்பர் 27க்கும் இடையே (இரண்டு தேதிகளும் நீங்கலாக) பிறந்த, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர் என்று அரசு தெரிவித்திருந்தது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என பாதுகாப்புத்துறை அலுவலகப் பிரிவு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி இந்திய ராணுவம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இயக்கம் இன்று தொடங்கி நவம்பர் 29 வரை நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NPhZx3W
via IFTTT

குஜராத்: துணை ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - சக வீரர் வெறிச்செயல் - என்ன காரணம்?

குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியில் இருந்த 2 சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

image

குஜராத்தின் போர்பந்தர் அருகே உள்ள நவி பந்தர் கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த தோய்பா சிங் மற்றும் ஜிதேந்திர சிங் என்கிற இரண்டு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனவுச்சாசிங் என்ற ராணுவ வீரரே சக வீரர்களை ஏகே-47 துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக 150 கிமீ தொலைவில் உள்ள ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பணியில் சுறுசுறுப்பாக இல்லாததால் எழுந்த மோதலில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படும் நிலையில், மோதலுக்கான விரிவான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போர்பந்தர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்: குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? - முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/d7qyBUe
via IFTTT

Featured Post

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” - பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

சொந்த வீடு வாங்குவதை காட்டிலும் வாடகைக்கு வீடு தேடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில் வாடகை வீட்டில் குடியேற ...

Popular

ads