உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா
பாக்டீரியா என்றால் என்ன?
What is Bacteria?
பாக்டீரியாக்கள் பூமியில் எல்லா இடங்களிலும் காணப்படும் சிறிய ஒரு செல் உயிரினமாகும். இவற்றிற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் முக்கியமில்லை. சில பாக்டீரியா இனங்கள் வெப்பநிலை மற்றும் குறைந்த காற்ற அழுத்தம் அதிகமாக உள்ள இடங்களிலும் உயிா் வாழ முடியும். நம்மை போன்ற மனிதர்களின் உடலிலும் பாக்டீரியாக்கள் நிறையவே உள்ளது. சொல்லப்போனால் மனித உடலில் உள்ள உயிரணுக்களை விட பாக்டீரியா செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
உலோக கழிவுகளை அழித்து உண்ணும் பாக்டீரியா
தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள சாண்டியாகோ ஆண்டிஸ் மற்றும் சிலி கடற்கரை மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஒருசிறிய நாடு சிலி.
சிலி நாட்டில் உலகின் மிகப்பெரிய அளவில் தாமிர உற்பத்தி நடக்கிறது. அதிகமான தாமிர சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து தாமிரங்களை பிரித்தெடுக்கும் போது உருவாகும் கழிவுகள் நிறைந்து சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிப்பதாக இருந்தன. இதனை சரி செய்யும் பொருட்டு சிலி நாட்டில் உள்ள ஒரு 33 வயதான பயோடெக்னாலஜிஸ்ட் நடாக் ரெயில்ஸ் என்பவர் அன்டோஃபாகாஸ்டாவில் உள்ள ஒரு சுரங்கத் பகுதியில் உள்ள தன்னுடைய ஆய்வகத்தில் உலோக கழிவுகளை உண்ணும் பாக்டீரியாக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
உயிரி தொழில் நுட்ப வல்லூனர் நாடாக் ரியல்ஸ் கடினமான சுற்றுப்புற சூழ்நிலைகளில் உயிர் வாழும் பாக்டீரியாக்களுடன் தீவிர சோதனை நிகழ்த்தி வந்தார். சுரங்கங்களில் தாமிரங்களை பிரித்தெடுக்க பாக்டீரியா நுண்ணியிரிகளை பயன்படுத்தும் சோதனைகள் நடந்து கொண்டிருந்த போது அவருக்கு இந்த உலோக கழிவுகளை உண்ணும் பாக்டீரியாக்களை உருவாக்கும் யோசனை வந்தது.
சில உலோகங்களை மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். அதிலும் மறுசுழற்சி செய்யப்படாதவை கழிவுகளாகவே தங்கிவிடும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதை கண்டு அவற்றினை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அழிக்கும் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வில் ஈடுபட்டார்.
அந்தோஃபாகாஸ்டாவிலிருந்து 350 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் உயரத்தில் உள்ள டாட்டியோ கீசர்களில் இருந்து பாக்டீரியாவை உலோகங்களை உண்ணும் பாக்டீரியாக்களை பிரித்தெடுத்தார். அமில சூழ்நிலையிலும் வாழும் தன்மையுள்ளவை பாக்டீரியாக்கள். இந்த பாக்டீரியாக்கள் உலோகங்களை அதிக அளவில் அரிக்கும் தன்மையினால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை என கூறியிருக்கிறார். பாக்டீரியாக்களுடன் ஒரு ஆணியை போட்டு ஆராய்ச்சி செய்தார். இதில் முதலில் அந்த பாக்டீரியாக்கள் ஆணியை சிதைப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அவை உணவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதிக பசியுடன் இரண்டு வருடங்கள் சோதனைகளுக்கு பின், பாக்டீரியாக்கள் உலோகங்களை சாப்பிடும் வேகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை கண்டார். அப்போது அவை ஒரு ஆணியை சிதைக்க வெறும் மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டன.
பாக்டீரியாக்கள் ஆணியை சிதைத்தபின் அதில் எஞ்சியிருப்பவை ஒரு சிகப்பு நிறத்திலான திரவம் மட்டுமே. இது ஒரு அதிசயமான தரத்தை கொண்ட லிக்ஸிவியண்ட் எனப்படும் திரவமாகும். பாக்டீரியாக்கள் உலோகங்களை சிதைத்ததற்கு பின் உற்பத்தி செய்யப்படும் திரவமானது ஹைட்ரோமெட்டல்லர்ஜி எனப்படும் செயல்முறைகளில் தாமிரங்களை உற்பத்தியை மேம்படுத்த முடியும் என நடாக் கூறுகிறார்.
திரவ மிச்சமானது பாறைகளிலிருந்து தாமிரத்தை பிரித்தெடுப்பதற்காக பயன்படுத்தலாம். இது இப்போதிருக்கும் ரசாயணங்களை பயன்படுத்துவதை விட அதிக நேர்த்தியான முறையில் உருவாக்குவது சாத்தியமானது.
நடாக் ரியல்ஸ் தனது கண்டுபிடிப்புக்கு சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த சோதனைகள் மனிதர்களுக்கு மற்றும் சுற்றுபுறத்திற்கு எந்தவகையிலும் தீங்காக இருக்காது என்பதை நிருபித்துள்ளதாக நாடாக் கூறியிருக்கிறார். ஆராய்ச்சிகளின் மூலம் தாமிரம் மற்றும் பல்வேறு வகையான கனிமங்களை பிரித்தெடுக்கும் பணிகளில் உருவாகும் உலோக கழிவுகளை சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித தீங்கும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் நீக்க முடியும்.
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பாக்டீாியா கண்டுபிடிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பாக்டீரியா பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கழிவுகளிலேயே அதிபயங்கரமாக சுற்றுப்புறச்சூழல்களை பாதித்து கொண்டிருப்பவை பிளாஸ்டிக் கழிவுகள் தான். இந்த பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியாவை ஜெர்மனியில் உள்ள லெப்ய்ஸிக் பகுதியைச் சேர்ந்த ஹெல்ம் ஹோட்ஸ் சுற்றுப்புறச்சூழல் ஆய்வு மையத்தினை சேர்ந்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சூடோமோனாஸ் புடிடா என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை பாக்டீரியாக்கள் கனம் நிறைந்த பாலியூரித்தேன் வகை பிளாஸ்டிக்கை கூட நொதித்து எளிய மக்கும் பொருளாக மாற்றிவிடும். இந்த வகை பாக்டிரியாக்கள் சுற்று புற சூழலுக்கு ஏற்றதா என்ற ஆய்வை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.
இதில் வெற்றி கண்டால் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஓரளவு உலகம் காப்பாற்றப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Thanks