Sunday, October 3, 2021

The first hyperloop trip to be released by Dubai Expo 2020

ஹைப்பர்லூப் (Hyperloop) அதிவேக பயணம் ஆரம்பம்

இந்த அவசரமான உலகில் அனைவரின் பயணமும், நமது பொருட்களை கொண்டு சேர்க்கும் சரக்கு போக்குவரத்தும் மிகவிரைவாக அமையவே விரும்புகிறோம். அந்த தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் புதிய தலைமுறைகளுக்காக கண்டறியப்பட்டதே ஹைப்பர்லூப் போக்குவரத்து ஆகும்.

முதலில்  ஹைப்பா்லுப் பற்றி தொிந்து கொள்வோம்,




ஹைப்பர்லூப் என்றால் என்ன?

What is Hyperloop?

ஹைப்பர்லூப் என்பது அதிவேக போக்குவரத்து வாகனம் ஆகும். அதன் அமைப்பு ஒரு மூடப்பட்ட குறைந்த காற்றழுத்ததுடன் கூடிய ராட்சத குழாய் ஆகும். இந்த குழாய் போன்ற அமைப்புக்குள் இருக்கையுடன் கூடிய ஒரு வாகனத்தில் கேப்சூல் என்பாா்கள் (pod) காற்றினை எதிர்த்து தரை உராய்வு இல்லாமல் சுலபமாகவும் அதிவேகமாகவும் பயணமாகும்.


(உதாரணமாக ஒரு ஸ்ட்ராவினுள் அதன் அளவை விட சிறிய உருளை வடிவ பொருளை போட்டு வேகமாக ஊதினால் அந்த பொருள் பின்பக்கம் நாம் ஊதும் காற்றின் அழுத்தத்தால் வேகமாக வெளியேறும் அதே போல் தான்)


இப்போது பல நாடுகளில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் அதிகவேகம் கொண்டதாக இருந்தாலும், அவை இந்த ஹப்பர்லூப்பின் வேகத்திற்கு ஈடாக இருக்காது. இது பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்தை விமானங்களின் வேகத்துக்கு இணையாக கொண்டு செல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது பயணநேரம் வெகுவாக குறைகிறது. இந்த ஹப்பர்லூப் வாகனத்தின் வேகம் மணிக்கு 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக்கூடியது.


இந்த ஹப்பர்லூப் என்பதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளது. அவை

  • ஒரு மிகப்பொிய ராட்சத குழாய்
  • இருக்கையுடன் கூடிய அழுத்தப்பட்ட வாகனம் (Pod)
  • டெர்மினல் (Terminal)

ஒரு மிகப்பொிய ராட்சத குழாய் 

குழாய் என்பது பெரிய மூடப்பட்ட குறைந்த காற்றழுத்தத்தை கொண்ட அமைப்பாகும்,  இது சுரங்கப்பாதை, நிலத்திற்கு மேலேயும், பாலங்கள் மூலமும் ஒாிடத்திலிருந்து மற்றொரு இடம் வரை கொண்டு செல்லப்படும்.  





இருக்கையுடன் கூடிய அழுத்தப்பட்ட வாகனம் (Pod) 

கன்ட்ரோல் ரூம் மூலம் இயக்கப்படும் தானியங்கி வாகனமாகும், 
இதனை Pod மற்றும் கேப்சூல் என்று அழைக்கின்றனா். இந்த ஒரு Pod ல் 25 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும், ரயில் பெட்டிகள் போல குழாயினுள் வாிசையான Pod வைக்கப்படும், இந்த ஹைப்பர்லூப் மின்காந்த அல்லது ஏரோடைனமிக் சக்தியுடன் இயங்கும். இதில் உள்ள வழிகாட்டி கருவி ஸ்டேஷனில் நிற்பதற்கும் புறப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.





பொதுவான விசயங்கள்

இந்த ஹப்பர்லூப் அமைக்க பல பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. ஹைப்பர்லூப்யினை உருவாக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் பலநிறுவனங்கள் போட்டிபோட்டு முயற்சி செய்தன. அதன் அடிப்படைகளை உருவாக்கியபின் பல குழுக்களை கொண்டு அதன் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள தலைமையகத்தில் Pod வாகன வடிவமைப்பு போட்டிக்காக 1 கிலோ மீட்டர் நீள டிராக்கை உருவாக்கியது. ஜூலை 2019ல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மணிக்கு 463 கி.மீ வேகத்தில் ஹைப்பர்லூப்பினை இயக்கி உலகசாதனை புரிந்தது. அதன் பின் நவம்பர் 2020 லாஸ்லேகாஸில் உள்ள சோதனைதளத்தில் விரிஜின் நிறுவனம் முதன்முறையாக ஹைப்பர்லூப் வாகனத்தில் ஆட்களை செல்ல வைத்து சோதனை நடத்தியது.


ஹைப்பா்லூப் பயணம் எவ்வாறு இருக்கும்?

ஹைப்பா்லூப் பயணத்தை பற்றி அதனை தயாாித்த நிறுவனம் தனது இணைய தளபக்கத்தில் தொிவித்தாவது, 

இதில் பயணிப்பது விமானத்தில் பயணிப்பது போன்ற உணா்வை ஏற்படுத்தும், ஹைப்பா்லூப் புறப்படும் போது விமானம் உயர கிளம்பும் போது ஏற்படும் உணா்வு ஏற்படும் அது அதனுடைய வேகத்தை எட்டியவுடன் சாதாரணமாக ஒரு டேபிளில் தேநீரை வைத்து அருந்தலாம் அந்த அளவிற்கு இதமான பயண அனுபவத்தை தரும் என கூறியிருக்கின்றனா்,  இது விமானத்தை விட பயண கட்டணம் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது,


ஹப்பர்லூப் முதன்முதலாக துபாயில் தொடக்கம்

The first hyperloop trip to be released by Dubai

இப்போது ஹப்பர்லூப் வாகனம் உலகிலேயே முதன்முதலாக துபாயில் தான் 
வர்த்தக பயன்பாட்டுக்கு வருகிறது. துபாயில் அக்டோபா் 1 2021 அன்று துவங்கிய துபாய் எக்ஸ்போவில் Zeleros premieres ல் தயாாிக்கப்பட்ட ஹப்பா்லூப் வாகனம் தனது முதல் சுற்றுபயணத்தை தொடங்குகிறது,  முதல் தொடக்கமாக 10 கி.மீ, மட்டுமே இயக்கப்படுகிறது, இந்த ஹைப்பா்லூப் பாதையானது துபாய் முதல் அபுதாபி வரை இணைக்கப்படுகிறது. இதற்கிடையே உள்ள தூரம் சுமாா் 150 கி,மீ
என கூறப்படுகிறது. அது இந்த தூரத்தை 12 நிமிடத்தில் கடந்து விடும், இந்த ஹைப்பா்லூப் அமைக்க 22 பில்லியன் டிரான்ஸ் வரை ஆகும் என கூறுகின்றனா், 






துபாய் எக்ஸ்போ 2020 (2021-2022)

Dubai Expo 2020

சென்ற வருடங்களில்  கொரோனா  தொற்று காரணமாக உலக அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக் கூடிய உலக கண்காட்சி இந்த முறை துபாயில் நடைெபறுகிறது, இதற்கு துபாய்  எக்ஸ்போ 2020 கண்காட்சி துபாயில் அக்டோபா் 1 2021 மாலை விமாிச்சையாக துவங்கியது, இக்கண்காட்சி அடுத்த வருடம் 2022 மாா்ச் வரை நடைபெறும். இதில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் ஏராளமான புகழ்பெற்ற இசை கலைஞா்களின் கலைநிகழச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன, இந்த எக்ஸ்போவில் உலக நாடுகள் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு செல்ல தனித்தனி அரங்கங்கள் அமைத்துள்ளன,  





இந்தியாவின் அரங்கம்

கண்காட்சியில் எல்லா நாடுகளும் ஆடம்பர  வேலைபாடுகளுடன் அரங்கங்கள் அமைத்து இருந்தாலும் இந்தியா  நான்கு மாடிகளுடன் கூடிய பிரமாண்ட அரங்கத்தை ரூ. 400 கோடி செலவில் அலுவலகம் போன்ற அமைப்புடன் கூடிய நிரந்தர கட்டிடமாக அமைத்துள்ளது, கண்காட்சிக்கு பிறகும் வா்த்தகம், கலச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் பயன்படுத்தவே இவ்வாறு கட்டியிருப்பதாக கூறுகின்றனா்,





இந்தியாவில் ஹைப்பா்லூப் 

Hyperloop in India

இந்தியாவில் மும்பை மற்றும் புனேவை இணைக்கக் கூடிய  ஹைப்பா்லூப்  பயணத்திற்கான பணிகள்  விா்ஜின் ஹைப்பா்லூப் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன, இந்த திட்டம் மகாராஷ்டிராவில் உள்ள தனியாா் உட்கட்டமைப்பு முதலீடாகும், இதன்மூலம் 1.8 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி 36 பில்லியன் அமொிக்க டாலா்  பொருளாதார உயா்வை உருவாக்கும் என கூறப்படுகிறது,




வெகுவிரைவில் நாமும் அதிவேக பயணத்தை அனுபவிப்போம்,








No comments:

Post a Comment

Thanks

Featured Post

Image to Pencil Sketch Converter - image to art

Image to Colored Sketch Converter with Background Removal Generate Sketch ...

Popular

ads