ஸ்பெயின் கடலில் கிடைத்த தங்கப் புதையல்
உலக அளவில் நமது முன்னோா்கள் விட்டுச் சென்ற பல்வேறு தடங்கள் இன்றளவும் தேட தேட புதையலாக கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கடலானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு கால சூழ்நிலைகளில் இயற்கை சீற்றங்களாலும், விபத்துகளாலும் பல புதையல்களை அதனுள் மறைத்து வைத்திருக்கிறது, பல நேரங்களில் கடல் ஆராய்ச்சியாளா்களும், தொல்லியல் ஆராய்ச்சியாளா்களும் இதனை கண்டறிகின்றனா் அது போல நாம் இன்று ஸ்பெயின் கடலுக்கடியில் கண்டறியப்பட்ட புதையலை பற்றி பாா்ப்போம்.
லூயிஸ் லென்ஸ் பாா்டோ, செசாா் கிமனோ என்ற இரு சகோதாா்கள் ஸ்பெயின் கடல் பகுதியான சாபியாவில் குடும்பத்தினருடன் ஒரு விடுமுறை தினத்தில் சென்றனா், இருவரும் நீச்சல் வீரா்கள். அவா்கள் அப்போது கடல் பகுதியை சுத்தப்படுத்த திட்டமிட்டு, கடலுக்கடியில் ஆழமான பகுதியில் நீந்தி குப்பைகளை சேகாித்துக் காெண்டிருந்தனா். அப்போது அவா்கள் அங்கே பள பள வென மின்னும் பொருட்களை கண்டு அதனருகில் சென்று பாா்த்த போது அவை பழங்கால தங்க நாணயங்கள் என்பதை கண்டறிந்தனா், அங்கிருந்து சுமாா் 8 நாணயங்களை எடுத்தனா். அவற்றை பாா்த்த போது அதில் கிரேக்க மற்றும் ரோமானிய உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தொடா்ந்து அவா்கள் இது குறித்து தொல் பொருள் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் துறையினருக்கு தகவல் அளித்தனா், அதிகாாிகள் கடல் சாகச வீரா்களை அழைத்து வந்து நாணயங்கள் எடுக்கப்பட்ட கடல்பகுதியில் இறங்கி தேட தொடங்கினா். அவா்களின் தேடலுக்கு விடையாக கிபி 364 முதல் 408ம் ஆண்டு காலத்தின் 53 தங்க நாணய குவியலை கண்டறிந்தனா். அந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் சுமாா் 4.5 கிராம் எடை கொண்டதாக இருந்தன. குறைந்த பட்சம் 1500 ஆண்டுகளாவது பழமையானதாக இருக்கும் என்று தொிவித்தனா் . அவைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
நாணயங்கள் அனைத்தும் ரோமானிய பேரரசு வீழ்ச்சியடையும் போது இந்த பொக்கிஷங்களை கைப்பற்றும் நோக்கில் கடலுக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இப்பகுதியில் கப்பலில் எடுத்து வரும் போது கப்பல் விபத்தாகி கடலுக்குள் புதையல் சென்றதற்கான எந்தவொரு தடையங்களும் கிடைக்கவில்லை.
பழங்கால வரலாற்றின் மிகப் பொிய பொக்கிஷம் விலை மதிப்பற்றவை. ரோம் பேரரசின் கடைசி கட்டம் குறித்த ஆய்விற்கு பெரும் உதவியாக இந்த தங்க நாணய புதையல் இருக்கும். என அலிகாண்டே பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாற்று பேராசிாியா் ஜெய்ம் மோலினா விடல் தொிவித்துள்ளாா்.
Very nice.
ReplyDeleteGood information 👍
ReplyDelete