Saturday, February 11, 2023

ஈசல் | கரையான்கள் | Termite life cycle | Flying Termite or Winged Termite or Alate | Eesal

ஒரு கரையான் குடும்பத்தின் தொடக்கம்

மழைக்காலங்களில் மழை பெய்து முடித்த சிறி்து நேரத்தில் நம் கண்களில் அடிக்கடி தென்படுபவை ஈசல்கள். இந்த ஈசல்கள் கரையான்களின் முதிர்ந்த பருவம் ஆகும். ஆனாலும் ஈசல்கள் ஒரு நாளில் உருவாகி அழிந்து விடும் என்று தான் சொல்லப்படுகிறது அது உண்மை அல்ல. ஈசல்கள் ஒரு கரையான் குடும்பத்தின் தொடக்கமாகும். ஈசல்களை பற்றியும் கரையாக்களை பற்றியும் சில தகவல்களை இங்கு தொகுத்துள்ளேன் வாருங்கள் பார்ப்போம்.


Winged Termite | Flying Termite | Alate



  • கரையான் Meaning in English - Termite
  • ஈசல் Meaning in English - Flying Termite or winged Termite or Alate
  • ஈசல்கள் இந்தேனேசியாவில் லாரன் என்று அழைக்கப்படுகின்றன 


கரையான்கள் ஒரு குழு இனமாகும். இந்த குழுவில் ஒவ்வொரு இனத்திற்கம் வெவ்வேறு பணிகள் உண்டு..





கரையான்கள் - Termite

  • கரையான்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டத்தட்ட டைனோசர் காலம் முதலே இருந்து இருக்கின்றன. பல தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கரையாக்களின் தடயங்கள் கிடைத்திருக்கின்றன. 
  • கரையான்கள் கூட்டமாக வாழும் ஆறு கால்களை கொண்ட பூச்சிகள் அவை அவற்றின் குஞ்சுகளை கூட்டமாக சேர்ந்து வளர்க்கின்றன.
  • புற்றில் உள்ள கரையான்கள் 24 மணி நேரமும் விடாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
  • உலகம் முழுவதும் உள்ள கரையான்களின் மொத்த எடை உலகத்தில் உள்ள மொத்த மனிதர்களின் எடையை விட அதிகமாக இருக்குமாம்.
  • கரையான்களில் ஈசல் எனப்படும் முதிர்ந்த கரையாக்களுக்கு இறகுகள் உள்ளன. அது தன் புற்றில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் புற்றை விட்டு வெளியே பறந்து சென்று தனக்கான இடம் கிடைத்த உடன் சிறகுகளை உதிர்த்துவிடும்.
  • கரையான்கள் சலனமில்லாமல் அழிக்க கூடிய பூச்சிகள் இவை பேப்பர், மரம், தரை, மரத்தால் உருவான பொருட்கள் கூட உண்கின்றன.
  • கரையான்களால் உலகம் முழுவதும் வருடத்துக்கு 5 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அழிக்கின்றன.
  • உலகில் 2000க்கும் மேற்பட்ட கரையான் இனங்கள் கண்டடறியபட்டிருக்கின்றன.

கரையான் கூட்டினுள்

  • ராஜா மற்றும் ராணி கரையான்
  • வேலைக்கார கரையான்கள்
  • சிப்பாய் கரையான்கள்
  • ஈசல்கள்

போன்றவை இருக்கும்


ராஜா மற்றும் ராணி கரையான் பணிகள்

இனப்பெருக்கம் மற்றும் புதிய கரையான்களை உற்பத்தி செய்கின்றன.

வேலைக்கார கரையான்கள் பணிகள்

புற்றினை உருவாக்குதல் மற்றும் முட்டைகள், குஞ்சுகளை பராமாித்தல், உணவு சேகாித்தல்.


சிப்பாய் கரையான்கள் பணிகள்

புற்றினை  பாதுகாத்தல்


ஈசல்கள் - Flying Termite or Winged Termite 

ஈசல்கள்  எப்படி உருவாகிறது ? - How Flying Termite are Formed ?

  • ராணி கரையான்கள் தன் புற்றில் இடநெருக்கடி ஏற்படும் சமயங்களில் ஒரு ஸ்பெசல் முட்டைகளை இடும். அவ்வாறு இடப்படும் முட்டைகளிலிருந்து உருவாகும் குஞ்சுகள் ஈசல் ஆக உருமாறும். 
  • கரையான் இனங்களில் உள்ள ஈசல்கள் கொசு, தேனி போன்று பறக்கும் பூச்சியினம் கிடையாது. அவற்றால் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் பறக்க முடியாது. விளக்கமாக சொல்லப்போனால் அவை மூக்குத்தி பஞ்சு போன்றுதான் தன்னுடைய விதைகளை மூக்குத்தி பஞ்சு சுமந்து கொண்டு செல்வதை போல் தான் இந்த ஈசல்களும் தன்னுடைய புதிய புற்று உருவாக்கவே குறிப்பிட்ட தூரம் வரை செல்ல இந்த சிறகினை பயன்படுத்துகின்றன. பின்னர் சிறகுகளை உதிர்த்து விடுகின்றன.
Termite Wing Removed


  • ஈசல்கள் அதன் இனப்பெருக்கம் மற்றும் புதிய புற்றுகளை உருவாக்கும் நோக்கத்துடன் ஒன்றாக ஒரே நேரத்தில் கூடி பறக்கின்றன.
  • சிறகுகளை இழந்த ஆண், பெண் ஈசல்கள் புதியதாக புற்றினை உருவாக்கி அதன் ராஜாவாகவும், ராணியாகவும் இருக்கும்.
Termite Life Starting


  • ராணி ஈசலானது வெளிர் வெள்ளை நிறத்தில் லார்வாக்களாக முட்டைகள் இடும். அவ்வாறு இடப்படும் முட்டைகளிலிரு்ந்து வேலைக்காரக்கரையான்கள், சிப்பாய் கரையான்களை உற்பத்தி செய்யும். 
  • ஒளி ஈசல்களை ஈர்க்கும் அதனால் தான் மழைக்காலங்களில் வெளியே வரும் ஈசல்கள் நம் வீடுகளிலும், தெருக்களி்லும் உள்ள ஒளி உமிழும் விளக்குகளை நோக்கி படையெடுக்கின்றன.
  • ஈசல்கள் பழுப்பு நிறத்தில் இருக்கம் அதன் தலையில் இரண்டு ஆண்டெனாக்களை கொண்டுள்ளன. இரண்டு ஜோடி இறகுகளை கொண்டிருக்கும்.
  • ஈசல்களை போலவே எறும்புகளின் இனத்தி்லும் இதேபோல் பறக்கும் எறும்புகள் உண்டு.

  • ஒரு புற்றிலிருந்து  வெளிவரும் ஈசல்களில் குறைந்தது 60 சதவீதம் ஓணான், பல்லி, பறவையினங்களுக்கு உணவாக மாறிவிடுகின்றன. மிஞ்சியவை அடுத்த புற்றை துவங்க செல்கின்றன.


கரையான்களின் ஆயுட்காலம் என்ன ? - What lifetime in Termites ?

  • தொழிலாளர்கள் மற்றும் வீரர்கள் ஏறத்தாழ ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
  • ராணி கரையான்கள் வாழ உகந்த சூழ்நிலைகளில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழும்.

ஈசல் உணவுகள்

  • பல நாடுகளில் ஈசல்கள் புரதச் சத்து மிக்க உணவாக உண்ணப்படுகின்றன..




கரையான் நன்மைகள்

  • கரையான்கள் கோழி வளா்ப்பில் கோழிகளுக்கு நல்ல தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கரையான் வளா்ப்பு

  • கரையான்கள் கோழி தீவனத்திற்காக வளா்க்கப்படுகின்றன. அவற்றை வளா்க்க கிழிந்த சணல் கோணிப்பை, அட்டை. காய்ந்த மாட்டு சாணம், பேப்பா், கிழிந்த துணிகள் போன்றவற்றை மண் பானையில் வைத்து சிறிது தண்ணீா் தெளித்து தரையில் கவிழ்த்து வைத்தால் 5 - 10 நாட்களுக்குள்  கரையான்கள் உற்பத்தியாகிவிடும்,

கரையான் அழிப்பு 

  • கரையான்கள் கோழிகளுக்கு உணவாக பயன்பட்டாலும் அவை மிக பொிய அளவில் வீடுகளில், அலுவலகங்களில் உள்ள பொருட்களுக்கு அழிவை உண்டாக்க கூடியவை. அவற்றினை அழிக்க பல நிறுவன கரையான் அழிப்பு ஸ்ப்ரேகள் உள்ளன. 
  • www.amozan.in கிடைக்கும் சில கரையான் அழிப்பு ஸ்ப்ரேகள்
https://www.amazon.in/s?k=termite+killer+spray+for+home+wood&crid=27ELZZPKPOQE1&sprefix=termite+%2Caps%2C1397&ref=nb_sb_ss_ts-doa-p_1_8

keywords : termite, termite treatment, termite control, termite inspection, flying termites, termites with wings, white ants, subterranean termites, ஈசல் எப்படி உருவாகிறது

No comments:

Post a Comment

Thanks

Popular

ads