Wednesday, July 26, 2023

Dussehra Festival 2023 - Kulasai Dussehra 2023

Dussehra Festival 2023 - Kulasai Dussehra  2023 

தசரா விழா 2023 - 24.10.2023 - இந்த ஆண்டு தசரா எப்போது?  தசரா தேதி - குலசை தசரா


kulasai mutharamman - kulasekaranpatiinam Dussehra


தசரா  திருவிழா  24.10.2023 அன்று (செவ்வாய்கிழமை)  கொண்டாடப்படுகிறது . தசரா விஜயதசமி, என்றும் அழைக்கப்படுகிறது .

மைசூரில் தசரா அன்று மைசூர் ஜம்பூ சவாரி, டார்ச் லைட் அணிவகுப்பு நடத்தப்படும் - மைசூர் அரண்மனை கிட்டத்தட்ட 1 லட்சம் பல்புகளால் ஒளிரும் இந்தியாவின் பல இடங்களில் ராவணன், கும்பகர்ணன் பிரமாண்ட கட்-அவுட்கள் தீ வைத்து எரிக்கப்படும் ராமலீலா . பொதுவாக இந்தியாவின் பிரதமர் ராம் லீலா நிகழ்வில் பங்கேற்பார் புது தில்லி வங்காளத்தில், கொல்கத்தாவில் - தசரா பிஜோய தசமி என்று கொண்டாடப்படுகிறது. இது துர்கா பூஜை, தசரா கொண்டாட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்நாளில் துர்கா தேவியின் சிலைகள் ஏரி, ஆறு, கடலில் கரைக்கப்படும். தசராவின் இந்த புனித நாளில், பக்தர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்குவார்கள். சிறு குழந்தைகளுக்கு 'அக்ஷராப்யாசம்' கல்வி இந்த நாளில் தொடங்கும். குழந்தைகளுக்கு ஒரு தட்டில் அரிசியில் ஓம் என்று எழுத வைக்கப்படும்.

நவராத்திரி 15.10.2023 முதல் 24.10.2023 வரை கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அன்று  கொலு  வைக்கப்படும்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2023

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக பிரசித்தி பெற்ற ஆலயமாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் 91, 48, 41, 31, 21, 11 நாட்கள் காப்பு கட்டி கடும் விரதம் இருந்து கும்பம் எடுத்து பல்வேறு வேடங்கள் அணிந்து தசரா திருவிழா 3 நாட்கள் முன்பே வந்து கடற்கரையில் தங்கியிருந்து சூரசம்ஹாரம் கண்டு அம்மனை வழிபட்டு காப்பினை கழற்றி விட்டு செல்வர்.  இப்பிரசித்தி பெற்ற திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.

இந்த வருடம் குலசேகரபட்டினம் தசரா எப்போது-?

குலசேகரபட்டினம் -ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக 24.10.2023 செவ்வாய்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறும். 25.10.2022 புதன்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் கொடியிரக்கம் நடைபெறும்

2023 தசரா திருவிழா விரதம் ஆரம்பிக்கும் தேதிகள்

61 நாட்கள் - 08.09.2023 சனிக்கிழமை

48 நாட்கள் - 18.09.2023 வெள்ளிக்கிழமை

41 நாட்கள் - 15.09.2023 வெள்ளிக்கிழமை

31 நாட்கள் - 25.09.2023 திங்கட்கிழமை

21 நாட்கள் - 05.10.2023 ஞாயிற்றுக்கிழமை

11 நாட்கள் - 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை

ஓம் காளி! ஜெய் காளி! ஓம் சக்தி பராசக்தி!

அடுத்த ஆண்டு  தசரா :  2024 இல், தசரா 12.10.2024 அன்று (சனிக்கிழமை 

No comments:

Post a Comment

Thanks

Popular

ads