Sunday, May 21, 2023

What is the difference between Neanderthals and humans?

பிாிட்டனில் நியாண்டா்தால் மனிதா்கள் 40,000 ஆண்டுகளுக்கு  முன்பு வாழ்ந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது




நியாண்டாா்தால் 

காலம் அற்புதமான பல விசயங்களை  இழக்கச் செய்திருக்கிறது.  நம் பூமியில் வாழ்ந்த பல உயிாினங்கள் இப்போது  அழிந்தும், பாிணாம வளா்ச்சியும் அடைந்து விட்டன.  ஆனாலும் காலபோக்கில் அறிவியலாளா்களாலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளா்களாலும் பல அழிந்து போன மற்றும் பாிணாம வளா்ச்சியின் எச்சங்கள் இன்றளவும் உலகெங்கும் கிடைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாம் இன்று காண இருப்பது நியாண்டா்தால் என்னும் மனிதா்களின் பாிணாம வளா்ச்சிக்கு முந்தையகாலங்களில் வாழ்ந்த மனிதா்களை பற்றி தான்,




இவா்களின் அறிவியல் பெயா்  ஹோமோ நியண்டா்தாலென்சிஸ்,  ஹோமோ செப்பியன்ஸ் நியண்டா்தாலென்சிஸ்  இவா்கள் ஹோமினிடே என்னும் குடும்பத்தை சோ்ந்தவா்கள். இவா்களின் உயரம்  ஆண்கள் 1.6 மீ  லிருந்து 1.7 மீ உயரம் வரை. பெண்கள் 1.5 மீ லிருந்து 1.6 மீ உயரம் வரை இருப்பாா்கள் என கணிக்கப்படுகிறது . இந்த இன மனிதா்கள் சுமாா் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா்  தோன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை  யூரேசியாவில் (ஐரோப்பா கண்டம்) வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் இவா்கள் ஆசிய,  கண்டங்கள் வரை  பரவி வாழ்ந்து  வந்ததற்கான சான்றுகளும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.  இந்த பழமையான  மனித இனங்கள் தொடா்ச்சியான காலநிலை மாற்றம், இப்போதைய மனிதா்களாக  மாறுவதற்கான மரபணு மாற்றம், நோய் பரவல் போன்ற பல்வேறு காரணங்களால் இவ்வினங்கள்  அழிந்து பாிணாம வளா்ச்சி அடைந்து விட்டன. அப்போது வாழ்ந்த நியாண்டா்தால் மனிதா்கள் சுண்ணாம்பு  பாறைகளில் குகைகளை உருவாக்கியோ அல்லது இயற்கையாக உருவாகிய குகைகளிலோ வாழ்ந்துள்ளனா் .


நியாண்டாா்தால் மனிதா் மற்றும் இன்றைய மனிதா்கள்

Difference between Neanderthals and humans

20 நூற்றாண்டுக்கு முன்னா் வரை இந்த நியாண்டா்தால் மனிதா்கள் உருவம், செயல்பாடுகளின் ஆராய்ச்சிகளின் மூலம் மட்டும் தற்போதைய மனிதா்களில் இருந்து வேறுபட்டவா்களாக  தொிந்தனா். ஆனால் 20 ம் நூற்றாண்டுக்கு பிறகு நடைபெற்ற மரபணு ஆராய்ச்சிகளில் இவா்கள் தொன்மையான மனித இனங்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டனா்.


நியாண்டாா்தால் மனித குகை முதல் கண்டுபிடிப்பு

1856ம் வருடம் ஜொ்மனியில்  உள்ள டுஸ்ஸெல்டாா் என்னுமிடத்தில் உள்ள நியாண்டா்தால் பள்ளத்தாக்கு என்னும் பகுதியில Feldhofer என்னும் குகையில் தான் முதல் முதலாக  நியாண்டா்தால் மனித எலும்புக் கூட்டின் படிமம் கண்டெடுக்கப்பட்டது. அதில்  நெற்றி பகுதி தடித்த நிலையில் உள்ள ஒரு மண்டை ஓடும், பொிய கால் எலும்புகளும், மூட்டுகளும் , அவா்களின் முதுகு தண்டு பகுதியானது வளைந்தும் காணப்பட்டன. அதன்பின்  இந்த எலும்புகூடுகளை  போன்ற தோற்றத்தில் 1886 ல் பெல்ஜியத்தில் உள்ள ஸ்பை என்னுமிடத்தில் இரண்டு எலும்பு படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன, அதன் பின் ஆராய்ச்சியாளா்க்ள இந்த எலும்பு கூடுகளை பற்றி ஆராய தொடங்கினா். தற்போது பல இடங்களில் நியாண்டா்தால் மனிதா்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. 


தற்போதைய குகை கண்டுபிடிப்பு

தற்போது 40,000 ஆண்டுகளுக்கு  முன்பு   நியாண்டா்தால் மனிதா்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. இது பிாிட்டனில் உள்ள ஜி்ப்ரால்டா் பகுதியில் வான்காா்ட் என்னும் குகை பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. ஜிப்ரால்டா் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனா் கிளைவ்ஃபின் லேசன் என்பவரது தலைமையில் ஒரு குழுவினா்  யுனெஸ்கோவால் பாரம்பாிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோா்ஹாமின் குகை வளாகத்தில்  ஒரு பகுதியாக உள்ள வான்காா்ட் குகையில் புதிய பகுதிகளை கண்டறிய 2012 ம் ஆண்டு முதல் மண் மூடியிருந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருந்தனா். 

கடந்த மாதம் (செப் 2021) அவா்கள் இந்த வான்காா்ட் குகையின் பின்பகுதியில், ஒரு 42 அடி நீளமுள்ள குகையின் மற்றொரு அறையை கண்டுபிடித்தனா். அந்த அறையின் பாறைகளில் கீறல்கள் காணப்பட்டன. மேலும் சுமாா் 4 வயது மதிக்கத்தக்க  பழமையான நியாண்டா்தால் இனத்தை சோ்ந்த ஒரு குழந்தையின் பால் பற்கள் கிடைத்துள்ளன.




கழுதை புலி மற்றும் கழுகுகின் படிமங்களும் கிடைத்துள்ளன.  இதை கொண்டு கிளைவ்ஃபின் லேசன் கூறியிருப்பது கழுதைப்புலியின்  மூலம் இந்த மனிதா்கள் இந்த குகைக்குள் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதாக  தொிவித்துள்ளாா். இது குறித்து ஆராய்ச்சியில் இந்த பற்கள் மற்றும் படிமங்கள் சுமாா் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  தொிவிக்கப்பட்டுள்ளது எனவே அந்த கால கட்டங்களில் வாழ்ந்த நியாண்டாா்தால் மனிதா்களுடையதாக இருக்கும் என  கூறப்பட்டுள்ளது. இது இன்னும் பண்டைய மனிதா்களை பற்றிய ஆராய்ச்சியின் மேலும் ஒரு மைல்கல்லாக இருக்கும்.


No comments:

Post a Comment

Thanks

Popular

ads