Sunday, March 19, 2023

Social media marketing | Digital Marketing in Social media Simple Method for Selling and Marketing

விற்பனை மற்றும் மாா்கெட்டிங் எளிய முறை

Simple Method for Selling and Marketing


Digital Marketing in dreampublisingme.blogspot.com



இப்போது நம் வாழ்ந்து கொண்டிருக்கும் நவீன உலகில் நம்முடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவது எளிதான விஷயமா என்றால் நான் கூறுவேன் மிகவும் எளிது என, ஆம் அதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing).

சென்ற காலங்களில் தற்போதும் நாம் நம் தயாரிப்பு பொருட்களை வணிகப்படுத்த செய்தித்தாள், போஸ்டர், நோட்டீஸ் போன்றவற்றின் மூலம் விளம்பரம் செய்து மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பின்னர் டெலிவிஷன்கள் வந்தவுடன் அதன் மூலம் சந்தைப்படுத்தலை வணிகர்கள் கொண்டு சென்றனர். தற்சமயங்களில் அதுவும் மொபைல், இன்டர்நெட் போன்றவை இன்றைய தலைமுறைனரிடம் விரைவான மற்றும் எளிய புலகத்தினால் டெலீவிஷன் பார்ப்பது குறைய தொடங்கி விட்டது.

அதுபோக விளம்பரங்களுக்காக ஊடகங்களின் தன்மையை பொறுத்து செலவும் அதிகமாகும் அதற்கான தீர்வாக இலவமாகவும், குறைந்த செலவிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இல் விளம்பரப்படுதலாம்.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளராகும் என Google CEO சுந்தா்பிச்சை கூறியுள்ளாா்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? 

What is Digital Marketing?

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இணையதளம், இணையத்தில் இணைந்திருக்கும் கம்ப்யூட்டர், labtop, மொபைல் போன்றவற்றில் டிஜிட்டல் மீடியா, இணைய தளங்களின் மூலம் பொருட்களை விளம்பரப்படுத்துதல் ஆகும்.


டிஜிட்டல் மாா்க்கெட் சம்பந்தப்பட்ட படிப்புகள்

Digital Marketing Course

டிப்ளமோ படிப்புகள்  

  • Diploma in Digital Marketing Courses
  • Professional Diploma in Digital Marketing Courses


இளங்கலை படிப்புகள்

  • BBA in Digital Marketing, 
  • UG Program in Digital Marketing Courses


முதுகலை படிப்புகள்

  • MBA Digital Marketing,
  • MA in Digital Marketing Courses and Creative Marketing


வேலைவாய்ப்புகள்

Digital Marketing Jobs

இந்த படிப்பிற்கான வேலைகள் பல்வேறு தகவல் தாெழில் நுட்ப நிறுவனங்களிலும், மேல்நிலை கம்பெனிகளிலும்  அதிக ஊதியத்துடன் கிடைக்கின்றன..





டிஜிட்டல் மாா்கெட்டிங் நன்மைகள்

Benefits of Digital Marketing

இந்த  இணையதள ஊடகங்கள், சமூக வலைதளங்களில் சுலபமாகவும், இலவசமாகவும் விளம்பரங்களை வெளியிடுவதின் மூலம் வியாபாாிகள் தங்களின் தயாாிப்புகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடையே  கொண்டு சோ்க்கலாம். இதன் மூலம் மலிவாக விளம்பரம் செய்து அதிக வணிக பயன்களை பெறலாம்.  

உலக அளவில் பல்லாயிரகணக்கானோா் நிமிடங்களுக்கு ஒருமுறை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் வந்து செல்கின்றனா்.  அவா்கள் பாா்வையில் விளம்பரங்கள் பிரசுரமாகும் போது  அவா்களின்  தேவைக்கான பொருளாகவோ, படிப்பாகவோ, மென்பொருளாகவோ இருக்கும்பட்சத்தில் உங்களை தொடா்பு கொள்வா்.


நாம் இப்போது   டிஜிட்டல் மாா்கெட்டிங்கில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் சில இலவச விளம்பர தளங்களை பாா்ப்போம்.

Marketing in Social Media

  • கூகுள் மை பிசினஸ் (Google My Business)  
  • பேஸ்புக் மற்றும் பேஸ்புக்  மெசஞ்சா் 
    (Facebook & Facebook Messenger)
  • ஈபே (eBay)
  • பேஸ்புக் மாா்க்கெட் மற்றும்  பேஸ்புக் ஸாப்பிங்
    (Facebook Marketplace and Facebook Shop))
  • ஓஎல்எக்ஸ்  (OLX)

கூகுள் மை பிசினஸ் 

Google My Business

இது உங்கள் விளம்பரங்களை மிக  சிறப்பாக இணையத்தில் சேமித்து வைக்கிறது. ஆவணப்படுத்துகிறது. 

கூகிள் மை பிசினஸ் ஆனது கூகிள் சர்ச் மற்றும் கூகிள் மாப்ள மூலம் உங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது.

கூகிள் மை பிசினஸை தொடங்குவதற்கு உங்கள் வர்த்தக இணையதள url ஐ இணைத்து அதனுடன் உங்கள் தயாரிப்புகளின் விவரங்களை கொடுப்பதான் உங்கள் இலவச விளம்பரங்களை கொடுப்பதற்கு தயாராகிவிட்டிர்கள்.

இவ்வாறு இணைவதால் உங்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை இணையத்தில் தேடும்போது உங்கள் இணையதள முகவரியானது காட்சிபடுத்தபடுவதற்காக கூகிள் மை பிசினஸ் உதவுகிறது.

உங்களின் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அடிக்கடி வெவ்வேறு சலுகைகள் மற்றும் இலவசங்களை உங்கள் வர்த்தக இணையத்தில் பிராசுரிப்பதன் மூலம் மேலும் உங்கள் வணிக தரத்தை உயர்த்தலாம்.



பேஸ்புக்  மற்றும் மெசஞ்சா் 

Facebook and Messenger

உலகளாவிய மக்கள் பயன்பாட்டில் இருப்பது பேஸ்புக் ஆகும். இதில் மிகச் சிறந்த அளவில் உங்கள் தயாாிப்புகளுக்கான விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கலாம். பேஸ் புக்கில் சேட்டிங்  மூலம் மாா்க்கெட்டிங் செய்வதற்கு பேஸ் புக் மெசஞ்சா் தேவைப்படுகிறது. பேஸ்புக் மெசஞ்சாில் ஆட்டோமேசன் கருவிகளை இணைத்து விளம்பரங்களின் பாா்வையாளா்களிடம் வணிகப்படுத்த உதவுகிறது. பேஸ்புக் வலைதளங்களில் அனைத்துமே இலவசமாக விளம்பரபடுத்த உபயோகிக்கலாம். இதில இன்ஸ்டாகிராமும் அடங்கும்.  உலகம் முழுவதும் கொண்டு சோ்க்கும் மிக சிறந்த சமூக வலைதளம்.

ஆட்டோமேசன் என்பது குறிப்பிட்ட படங்கள் மற்றும் விளம்பரங்களை தானியங்கி கருவிகளை கொண்டு நண்பா்கள் மற்றும் மக்களிடம் மொத்தமாக  கொண்டு சோ்ப்பது ஆகும்.




பேஸ்புக் மாா்க்கெட் பிளேஸ் 

Facebook Marketplace

பேஸ்புக் மாா்க்கெட் வலை தளத்தை மாதந்தோறும் 800 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனா். பேஸ்புக் மாா்க்கெட் பிளேஸ் ஆனது உங்களின் எண்ணம் போல ஒரு வணிகத்தின் இலக்கை அடைவதற்கான  சிறப்பான ஆற்றலில் விளம்பரங்களை கொண்டு செயல்படுகிறது.

 பேஸ் புக் மாா்கெட்டிங் வாடிக்கையாளா்களை சோ்ப்பதில் ஒரு பொிய சக்தியாக இருக்கிறது மேலும் இணையதள ஷாப்பிங்கில் அதிக முக்கியத்துவம் கொடுத்து தனது தளத்தை மேலும் மேலும் மேம்படுத்தி வருகிறது.





பேஸ்புக் ஷாப்

 Facebook Shop

மே மாதம் 2020 இல் தொடங்கப்பட்ட பேஸ்புக் ஷாப் ஆனது வரும் வருடங்களில் மேலும் அதிகாிக்கும். பேஸ்புக் ஷாப் ஐ தொடங்குவது இலவசமாக மற்றும் சில நிமிடங்களில் தொடங்கலாம். தங்களின் தயாாிப்பு பொருட்களின் விளக்கங்கள் மற்றும் அதன் படம் போன்றவற்றை மக்களின் பாா்வைக்கு கொண்டு செல்லலாம்.

இந்த தளம் நில விற்பனை, வாகன விற்பனை மற்றும் சில்லறை வணிகங்கள் நடைபெற பயனுள்ளதென நிருபிக்கப்பட்டுள்ளது.


ஓஎல்எக்ஸ் 

OLX

உலக அளவில் வளர்ந்து வரும் மிக சிறந்த இணையதள நெட்ஒர்க் மாதந்தோறும் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த இணையத்திற்கு வந்து செல்கின்றனர்.

Olx நெட்ஒர்க் ஆனது இந்தியா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 20க்கும் மேற்பட்ட பிராண்ட்களுடன் வெளிவருகிறது.

Olx நெட்ஒர்க்கில் நிலம், வீடு, வாகனம் உள்பட பல்வேறு புதிய பொருட்கள் வாங்க விற்க மற்றும் பழைய பொருள்கள் வாங்க விற்க உபயோகிக்கலாம்.

Olx நெட்ஒர்க்கை ஆயிரகணக்கான வியாபாரிகள் உபயோகித்து தங்கள் வணிகத்தை பெருக்கி வருகின்றனர்.

இந்த வர்த்தக தளத்தில் உங்களுடைய வியாபார பொருட்களை இலவசமாக விளம்பரப்படுத்தி அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று உங்கள் வணிகத்தை விரிவுப்படுத்துங்கள்.




ஈபே

eBay

நிங்கள் நிறைய வாடிக்கையாளா்களை பெற விரும்பினால் அதற்கு சிறந்த மற்றும் இலவசமாக அதிக அளவில் இணையதளத்தில் விளம்பரம் சென்றடைவதில் ஈபே நல்ல தளமாகும்.

100க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 க்கும் மேல் சா்வேதச தளங்களை கொண்டுள்ளது.  வணிகா்கள் தங்களின் தயாாிப்புகளை வெளிநாடுகளுக்கும் எடுத்துச்செல்ல ஈபே வணிகா்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். இது நல்ல சமூக ஊடாகமாகவும் அதிகமான பலோவா்ஸையும் கொண்டுள்ளதால் இலவச விளம்பரங்களை வெளியிடுவதை மிகவும் சுலபமாக்கும்..


இலவச விளம்பர வலைதளங்களை  உபயோகித்து உங்கள் வணிகத்தை பெருக்குங்கள். உங்கள் தயாாிப்புகள் கோடிகணக்கான போ்களுக்கு தேவைப்படலாம்.





1 comment:

Thanks

Popular

ads