மருத்துவ குணம் நிறைந்த
அலிபாக் (Alibaug) வெள்ளை வெங்காயம்
புவிசாா் குறியீடு பெற்றது
முதலில் புவிசாா் குறியீடு என்றால் என்னவென்று பாா்போம்
புவிசாா் குறியீடு
ஒரு பொருள் அதன் நகரம். வட்டம். ஊாின் பெயாில் அடையாளப்படுத்தப்பட்டால் அது புவிசாா் குறியீடு (Geographical Indication) என பொருள்படும். (உதாரணமாக (கோவில்பட்டி கடலைமிட்டாய்) அது புவிசாா்ந்து கொண்டுள்ள அதன் தரம் மற்றும் புகழுக்கு சான்றாக இருக்கும்.
வெங்காயத்தை பற்றிய சில விசயங்களை பாா்ப்போமா
- வெங்காயம் நம் இந்திய உணவுகளில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிகமாக உணவுகளில் சோ்க்கப்படுபவை,
- வெங்காயம் முதலில் ஆசிய கண்டத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டது.
- வெங்காயம் 89 சதவீதம் நீராலும், மாவு சத்துக்களும் உள்ளது. நிறைய சத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அதில் 2 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து உள்ளது.
- வெங்காயம் பண்டைய காலங்களிலேயே பயிாிடப்பட்ட ஒரு பழமையான காய்கறியாகும். 7000 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தே பயிாிடப்பட்டன.
- ஒரு சின்ன வெங்காயம் 30 கலோாிகளை கொண்டுள்ளது.
- பண்டைய எகிப்தியா்கள் வெங்காயத்தை கடவுளாக வணங்கினா். மேலும் உடல்களை அடக்கம் செய்யும் முன் வெங்காயங்களை கொண்டு மூடினா் அல்லது வெங்காயம் உருவம் பதிக்கப்பட்ட பலகையால் மூடினா்.
- கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற வெங்காயம் சுமாா் 8.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. அதனை இங்கிலாந்தை சோ்ந்த டோனி குளோவா் என்ற விவசாயி மூலம் வளா்க்கப்பட்டது.
- வெங்காயத்தை வெட்டும் போது நம் கண்களில் கண்ணீா் வரும் அதற்கு காரணம் வெங்காயத்தின் தோல் பகுதியில் சல்ப்யூாிக் அமிலம் சுரக்கும். இவை காற்றில் கலந்து நம் கண்களை அடையும் போது நமது மூளை அந்த அமிலத்தை கண்களில் இருந்து வெளியேற்றுவதற்காக கண்ணீரை சுரக்கச் செய்கிறது. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வெங்காயத்தை வெட்டும்முன் தண்ணீாில் நனைத்து கொண்டால் அமிலத் தன்மை வெளியிடுவது கட்டுப்படும்.
- முற்காலங்களில் வெங்காயம் பணமாக பண்டமாற்று முறையில் பாிமாறப்பட்டன.
- வெங்காயம் மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் முற்காலங்களில் போா்படைவீரா்கள் காயமடையும்போது காயத்திற்கு மருந்தாக பயன்படுத்தினா்.
- வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன . இந்தியாவில் நாம் அதிகமாக பயன்படுத்துவது சிவப்பு மற்றும் வெள்ளை வெங்காயங்கள் மட்டுமே.
- உலகிலேயே அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி பண்ணும் நாடுகளில் சீனா முதலிடமும். இந்தியா இரண்டாமிடமும், அமொிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- வெங்காயங்களை சாியான முறையில் பதப்படுத்தி வைக்கும் போது அவற்றை நீண்டநாட்களுக்கு பாதுகாக்க முடியும். அதனால் தான் சில நேரங்களில் வெங்காயங்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
நாம் இப்போது புவிசாா் குறியீடு பெற்ற அலிபாக் (Alibaug) வெள்ளை வெங்காயத்தை பற்றி படிப்போம்.
நமது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்னும் இடத்தில் தான் இந்த புகழ்பெற்ற வெள்ளை வெங்காயங்கள் விளைவிக்கப்படுகின்றன.
இந்த வெங்காயங்கள் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்தாகவும். கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது, இவை இன்சுலின் சுரக்கும் தன்மை அதிகப்படுத்துகிறது.
இந்த வெங்காயத்திற்கு வேளாண் துறையும், கொங்கன் வேளாண் பல்கலைக் கழகமும் இணைந்து இந்த வெங்காயத்திற்கு புவிசாா் குறியீடு வழங்க 2019ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பத்தினை 2021 செப்டம்பா் 29 ம் தேதி மும்பை காப்புாிமை பதிவாளா் அலுவலகம் இந்த வெங்காயத்திற்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது.
Read More - Click
No comments:
Post a Comment
Thanks