எறும்பு புற்று
Ant colony
எறும்புகள் ஒற்றுமையின் உதாரணமாக இருக்கின்றன.
அவை புற்றினை கட்டமைக்க உழைத்துக் கொண்டே இருக்கும்.
அவை தனது பாதுகாப்பிற்காகவும், உணவு சேமிப்பதற்காக, இனப்பெருக்கத்திற்காக நிலத்திற்கு அடியில் புற்றுகளை அமைகின்றன.
எறும்பு புற்றானது நிறைய அறைகளை கொண்ட மிக நீண்ட அமைப்பாகும். இந்த புற்றுகள் நிறைய வெளியேறும் மற்றும் உட்புகும் வழிகளை கொண்டிருக்கும்.
பெரும்பாலும் இந்த அறைகளில் உணவு சேமிக்க பயன்படுத்துகின்றன.
மழைக்காலங்களில் முன்கூட்டியே அறிந்து ஈரமான தரைகளில் புற்றுகளை புதுப்பிக்கின்றன.
மழைநீர் புற்றுக்குள் புகாமல் இருக்க எறும்புகள் புத்திசாலித்தனமான யுத்திகளை கையாளுகின்றன.
எறும்பு புற்றின் நுழைவாயில்கள் நேராக கீழ்நோக்கி சென்று பின்னர் கீழிருந்து மேல் நோக்கி அறைகளுக்கு செல்லுமாறு வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment
Thanks